பெண்களுக் கெதிரான வன்முறைகள்
பேர்குறிப் பதுவீணே எந்நிலத்தும்
கண்களுக் கெதிர்நேர்வ தென்றபோதும்
கண்டவர் விழிமூடி நின்றுபோகும்
அண்புது நடப்பேபல் எண்படுமாம்!
ஆழ்கவன் றூர்கண்னீர் சிந்திடவே
மண்புதை கொடுமைகள் கண்டிடிலோ
மன்னுயிர் களும்வாடும் நெஞ்சுநிற்கும்.
Notes:
வன்முறை - violence
எந்நிலத்தும் - எந்த நாட்டிலும், கண்டத்திலும்
விழிமூடி நின்று போகும் - கண்னை மூடிக்கொண்டு நின்றுவிட்டு அங்கிருந்து அதன்பின் அகலும்.
அண்புது - அண்மையில் நடந்த புதிய
பல் எண்படுமாம் : பல எண்ணிக்கையுள் படும்; அல்லது பல
எண்ணிக்கையுள் அகப்படும்
ஆழ்கவன்று - ஆழ்ந்து கவன்று; ( கவலைப்பட்டு.)
மண்புதை - மண்ணிற் புதைக்கும்.( நரபலி முதலியவையும். கொல்லப்பட்டுப் பபுதைப்பதும் அடங்கும்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.