இதனை இப்போது அறிந்துகொள்வோம்.
கிண்டல் என்று பேச்சு வழக்கில் சொல்வர். இது கிண்டிவிடுவது என்ற சொற்பொருளை உடையது. அதாவது அடக்கமாக இருப்பதைக் கிளறி
மேல் எழுப்புவது என்று எடுத்துக்கொண்டால் தவறில்லை என்று சொல்லலாம். கேலிப்பேச்சு என்றும் சொல்வதுண்டு. கேலி என்பதோ கேளிக்கைப் பேச்சு என்பதன் சுருங்கிய வடிவம். கேளிக்கை > கேளி > கேலி. Now : " gElli " just like cheeni has become "jeeni!!
வக்கணைப் பேச்சு என்றும் சொல்வதுண்டு. இவை நிற்க:
பரிகாசம் என்பதில் பரிதலாவது அன்பு காட்டுதல், இரங்குதல் என்றெல்லாம் பொருள் கொள்ளக்கூடிய சொல்.
காய்தல் என்பது சூடேற்றுதல் என்றும் ஒளிர்தல் என்றும் பலபொருட்சாயல்களை உடையது. "காய்தல் உவத்தல் இன்றி ஆராயவேண்டும் " என்ற வாக்கியத்தில், வெறுப்பு விருப்பு என்று
பொருள்கொள்ளலாம். எரிச்சல் அல்லது பொறாமைப்படுதல் முதலியவையும் காய்தலில் அடங்குவன. காய்மை என்ற வடிவமும் உளது. சினமும் கண்டிப்பும்கூட இவற்றுள் அடங்கும்.
காய்தல் என்ற சொல்லுக்குப் பிறபொருள்களும் உள.
காய்> காயம் > காசம் என்று மாறும். யகரம்> சகரம் ஆகும்.
ஆகவே பரிகாசம் என்பது, பரிவு ஒருபுறமிருக்க, காய்தலை மேற்கொண்டு பேசுதல் என்ற அழகான பொருள் தருகிறது.
பரிகாசம் என்பதன் மூலங்கள் பரிதல், காய்தல். இவை தமிழ். Well, if father and mother are Tamils, the offspring can be Indo-European?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.