சுவாசம் என்ற சொல் நன்கு ஆராய்வதற்குரியது ஆகும்.
இதன் பிற்பாதியாகிய வாசம் என்பதை முதலில் கவனிப்போம்.
இந்தச் சொல், வாய் என்ற சொல்லில் இருந்து திரிந்து அமைகின்றது.
வாய் > வாயம் > வாசம் என்று இச்சொல் அமையும்/.
வாய் என்பது பல்பொருள் ஒருசொல். வாயில் > வாசல் என்ற சொல்லில் அது வீட்டினுள் அல்லது அதுபோன்ற இடத்தினுள் செல்லுதற்கும் வெளியில் வருதற்கும் உள்ள வழியைக் குறித்தது.
வாய்க்கால், கால்வாய் என்பவற்றுள் அது நீரோடு வழியைக் குறித்தது. வருவாய் என்ற சொல்லில் அது பொருள்வரவு என்று நாம் அறிகின்றோம்.
வாய் என்பது உண்மையில் இடம் என்று பொருள்படுவதாகும்.
எனவே சுவாசம் என்ற சொல்லில், வாசம் என்பது நெடிதாக வரும் வழி என்று பொருள்படும். மூக்கு என்னும் மூச்சுக் கருவி வாயினுடன் தொடர்பு உடையது என்பதால் அதுவும் வாயின் ஒருபகுதியாகக் கருதப்படக் கூடும், காரணம் மூச்சு என்பது வாயினாலும் இயங்கககூடியதாகும்.
இச்சொல்லுடன் சு என்பது முன் நிற்கிறது. மூச்சு என்பது உள்ளும் வெளியிலுமாக சுழற்சி முறையில் நடைபெறுவது. இது குறிக்கும் தமிழ்ச்சொல் சுலவு என்பது ஆகும்/ இதன் தலையெழுத்து: சு என்பது/ இது வாசம் என்ற சொல்லின் முன் நிற்கிறது.
ஆகவே சுவாசம் என்பது சுழற்சியாக நடைபெறும் மூச்சைக் குறித்தது. காற்று என்று பொருள்படும் வாயு என்ற சொல்லும் வாய் என்பதன் அடியாக அமைக்கப்பட்டதே ஆகும்.
முடிவாக, சுவாசம் என்பது தமிழினின்று அமைந்த புனைவுச்சொல் என்பது நன்கு தெரிகிறது. முழுச் சொற்களை முன்னொட்டுக்களாக ஆக்குகையில்
முதலெழுத்துக்களை மட்டும் நிறுத்திச் சொல் அமைப்பது ஒரு கலையாகும்.
இந்த முறையைத் தமிழும் கையாண்டு உள்ளது. உதாரணம்: வடு :> சுவடு.
பின் வந்தோர், இவற்றிலிருந்து கற்றுக்கொண்டனர்.
அறிந்து மகிழ்க/
The first draft on this subject was wiped out by a remote application. Then this was rewritten.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.