இரவு இரா என்பன தமிழ் . ஆனால் இராத்திரி என்ற சொல்வடிவமும் தொன்று தொட்டு தமிழ்ப் பேச்சில் இடம்பெறத் தவறுவதில்லை. இரவு என்பது தலை கிள்ளப்பட்டு ராவு என்றும் தோற்றரவு (அவதாரம் ) செய்யும். சில வேளைகளில் ரா என்றுமட்டும் வரும். ராவிலே படுக்கும் போது கால் கை மூஞ்சி எல்லாம் கழுவிவிட்டுப் படு என்று அம்மா சொல்வதைப் பிள்ளைகள் கேட்டிருப்பார்கள். இரவு குறிக்கும் இச்சொல் ஏன் இத்துணை உருவுகள் கொள்கின்றன ? எல்லாம் நம் தமிழரின் சொல் பல்வடிவப் புலமைதான் !
இனி இராத்திரி என்பதனை உற்று நோக்குவோம்.
இரா+ அத்து + இரி
அத்து என்னும் சாரியை இங்கு வந்துள்ளது.
இவர் நடனத்தில் புலி என்கையில் நடனம்+ அத்து + இல் என்று அத்துச் சாரியை வரும். அத்து என்பதை விட்டு, நடனமில் புலி என்று புணர்த்தினால் அது நடனம் இல்லாத புலி என்று கொள்ளவேண்டி வரும்.
ஆங்கு, பொருள் கெடுமன்றோ?
இருத்தல் என்பது மலயாளத்தில் இரி என்று வரும். அன்றேல் இரு என்னும் தமிழ் இகர விகுதி பெற்றது எனினுமாம்.
இதை ஒரு வாக்கியமாமாக எழுதின், இரவு நேரமாக இருத்தல் என்று விரிக்க.
அத்து + இரி

இரவில் தூங்கு.
இராத்திரி தூங்கு.
இரவு நேரமாய்........
இருக்கையில் தூங்கு.
இதிற் சிறக்கும் பொருள் விரிப்பு யாதுமில்லை எனினும் இதுபோலும் விரிப்புகள் பேச்சில் வருவனவே. இயல் நூலை ஏந்தி உசாவிக்கொண்டு யாரும் உரையாடுவதில்லை.
திரி என்பதை திரி என்னும் தனிச்சொல்லாகக் காணின்,
இரா + திரி இராத்திரி ஆகும்.
இரவாகிய திரிபு, இரவாகிய மாற்றம் எனல் பொருந்தும்.
இப்படி இவ்வழக்கு எங்கும் பரவி நிற்பது தமிழன் ஒரு காலத்து யாண்டு பரவி இருந்ததைக் காட்ட வல்லது.
இராத்திரி என்பது இருவேறு வகைகளிலும் பொருந்தி வரும் சொல் அமைப்பு.
edited on 21.10.2022

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.