வாரணம் ஆயிரம் சூழ வலம்வந்து
என்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள் .
வாரணம் என்றால் யானை. ஆயிரம் ஆனைகள் ( யானைகள் என்றும் எழுதப்பெறும் ) வலம் வந்தன என்றால் இங்கு காட்டு யானைகளைக் குறிக்கவில்லை.
வாரணம் என்ற சொல்லே காட்டு யானைகளைக் குறிக்காது. அந்த யானைகள் வலம் வர உதவாதவை என்பது மட்டுமன்று; வாரணம் என்ற சொல்லே அவற்றை உட்படுத்தாது.
வாரணம் என்பது வரையப்பெற்ற யானைகளைக் குறிக்கும் என்று அறியவேண்டும். வண்ணங்கள் தீட்டப்பெற்று அழகு படுத்தப்பட்ட யானைகளையே பாடல் குறிக்கும்; அதில் வந்த சொல் குறிக்கும்.
வரி வரியாகத் தீட்டப்பட்டு வலம் வருபவை அவை .
வரி + அண் + அம் = வாரணம் .
அல்லது:
வரை + அண் + அம் = வாரணம் .
இதில் வ என்ற குறில் வா என்று நீண்டது.
எடுத்துக்காட்டுகள்
படி + அம் = பாடம்.
உங்கள் கண்ணும் கருத்தும் எழுதப்பட்டவற்றில் படிந்து பின் நீங்கள் அவற்றைத் தெரிந்து வாயிப்பதால் ( வாசிப்பதால் ) (வாய்விட்டுப் படிப்பதால் ) அது பாடம் ஆகின்றது.
இதன் முன் கருத்து படிதலே. படித்தல் பிறவினை.
இப்புணர்ச்சியில் (ட் + இ = டி ) இகரம் மறைகிறது. இகரம் கெட்டது என்பர் இலக்கணியர். சுடு > சூடு என்று பெயர் ஆவது போல் முதல் (எழுத்து) நீண்டு
ப > பா ஆகிறது.
இன்னும் பல உதாரணம் காட்டலாம் என்றாலும் இக்கருத்தே வலியுறும்.
உங்களுக்கு நேரமில்லை அன்றோ?
இப்படித்தான் வரி +அணம் என்பதிலும் முதல் (தலை) நீண்டு இகரம் கெட்டு
வாரணம் என்றாகி, அலங்கரிக்கப் பட்ட யானையைக் குறிக்கிறது,
வரை + அணம் என்பதில் ஐ கெட்டு முதல் நீண்டு புணர்ந்தது என்றாலும் அதுவும் இதே.
என்மட்டில் இவற்றுள் எதையும் நீங்கள்கொள்ளலாம். பெரிய வேறுபாடு ஏதுமில்லை. விவாதம் வேண்டியதில்லை. ( வி(ரி) + வா (ய் ) + து + அம் )
அறிந்து இன்புறுவீர்.
--------------------------------------------------
அணம் என்ற இடைச்சொல் - முன் இடுகைகளில் காண்க.
will edit

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.