பத்து என்ற சொல் பல் ( பல, பன்மை) என்னும் சொல்லினின்று தோன்றியது. ஒன்று முதலாக எண்ணக்கற்றுக்கொண்ட மாந்தர்க்குப் பத்தை எட்டியவுடன் அது மிகப்பலவாகத் தோன்றியதே, பல் என்பதன் அடிப்படையில் பத்தை எண்ணியதற்குக் காரணம் ஆகும். இன்று மனிதன் ஆயிரங் கோடிகளாகக் கணக்கிடுகின்றான்.
ஐந்துக்கு அப்பால் பெரியதாவது ஆறு ; இது நதி என்றும் பொருள் படுகிறது. ஐந்துக்கு அப்பால் செல்வது ஆறுபோல் நீள்வது என்று அயர்ந்தான் அவன். அந்த நீட்சி குறிக்க ஆறு என்றே கூறினான். அதிலிருந்து மேல் இன்னொன்றைச் சேர்த்தால் அது ஓர் எழுச்சி ஆகிவிட்டது .....எழு > ஏழ் > ஏழு என்று அதைக் குறித்தான்.
இங்ஙனமே ஆயிரத்தை அடைந்த போது அவன் எண்களை எண்ணுவது "ஆகிவிட்டது - இறுதி ஆகிவிட்டது - இனி ஏது பிறவென்ற நிலைக்கு வந்து
அதை "ஆய் + இரு + அம் -= ஆயிரம் என்று கூறினான். எண்ணிக்கை முடிவாகி இருக்கின்றது என்று கருதினான்.
இன்னும் சென்ற காலை இனி முடியுமோ - திரும்பவன்றோ வேண்டும் என்ற கவலை. கோடு என்றால் மலையுச்சி. கோடு என்றால் வளைந்து திரும்புதல். இதை அடிப்படையாக ஏற்று, கோடு> கோடி என்றான். கோடி என்பதோ முடிவு என்றும் பொருள். தெருக்கோடி என்ற வழக்கை உன்னுக.
ஆயிருக்கும் ஆயிரமும் கோடுயர்ந்த கோடியும் கண்டு மகிழ்ந்தோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.