ஒரு வலைத்தளத்தைப் புகழ்ந்து எழுதியது,
செடியிற் பூத்ததொரு சிறுபூ---- அதன்
செழுமைஎன் சொல்வது
வளமையில் வெல்வது
அடியில் இருந்து நுனி வரையில் --- பார்க்கின்
அதுவொரு தேனடை
அழகாம் தமிழ் நடை,
பழுத்து விளைந்தபல கருத்து ---- அது
பயன்மிகத் தந்தது
பளிங்கென் றொளிர்ந்தது
தழுக்கும் தமிழுணர்வும் உலகில் ---- பெறும்
தகுந்த ஊக்கமினி
தகைத்தல் நீக்கும்கனி .
சொற்குப் பொருள் காட்டும் ஆடி ---- தமிழ்
சொந்தம் எனவு ணர்த்தும்
சோர்வில் நிலைஇ ணர்த்தும் ;
தெற்கில் இலகு தமிழ் உலகை --- எந்தத்
திக்கும் புகழ்ந்திடவே
தக்க நிகழ்ந்திடவே., (செடியிற்)
தகைத்தல் = இளைத்தல், களைத்தல் .
தழுக்கும் - செழிக்கும்.
சொற்கு - சொல்லுக்கு
ஆடி - கண்ணாடி
சோர்வில் - சோர்வு இலாத
இணர்த்தும் - நெருங்கச் செய்யும்
இலகு - விளங்கும்
தக்க - தக்கவை .
செடியிற் பூத்ததொரு சிறுபூ---- அதன்
செழுமைஎன் சொல்வது
வளமையில் வெல்வது
அடியில் இருந்து நுனி வரையில் --- பார்க்கின்
அதுவொரு தேனடை
அழகாம் தமிழ் நடை,
பழுத்து விளைந்தபல கருத்து ---- அது
பயன்மிகத் தந்தது
பளிங்கென் றொளிர்ந்தது
தழுக்கும் தமிழுணர்வும் உலகில் ---- பெறும்
தகுந்த ஊக்கமினி
தகைத்தல் நீக்கும்கனி .
சொற்குப் பொருள் காட்டும் ஆடி ---- தமிழ்
சொந்தம் எனவு ணர்த்தும்
சோர்வில் நிலைஇ ணர்த்தும் ;
தெற்கில் இலகு தமிழ் உலகை --- எந்தத்
திக்கும் புகழ்ந்திடவே
தக்க நிகழ்ந்திடவே., (செடியிற்)
தகைத்தல் = இளைத்தல், களைத்தல் .
தழுக்கும் - செழிக்கும்.
சொற்கு - சொல்லுக்கு
ஆடி - கண்ணாடி
சோர்வில் - சோர்வு இலாத
இணர்த்தும் - நெருங்கச் செய்யும்
இலகு - விளங்கும்
தக்க - தக்கவை .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.