அந்நியன் என்ற சொல்லுக்கு முன் விளக்கம் எழுதியுள்ளோம். அதை இங்கு சுருங்கச் சொல்வதானால் அ என்பது தமிழில் ஒரு சுட்டு, அங்கு என்று படர்க்கையை அது சுட்டும், ஆனால் அ என்பது அன்மை என்றும் பொருள் படுவது, அன்மையாவது அல்லாமை; அல்லாதது. அல்லாதன; அல்லாதவன் என விரியும் . இதுவன்று அவை அல்ல என வரும். அல் திணை > அஃறிணை ; அல்வழி ' அன்மொழி என்பவை பழஞ்சொற்கள்
அல் தன் லகர ஒற்றை இழந்து அ என்றும் நிற்கும். மங்கலம் > அமங்கலம் போல. அதாவது மங்கலம் அல்லாதது.
அல் + நீ + அன் = அன்னியன் ( நீ அல்லாதவன் ; அடுத்தவன்; பிறன் )
இங்கு நீ என்பது நி என்று குறுகியது. நீ சிலவிடத்து நி என்று குறுகும். நின் என்ற சொல்லில் அது குறுகியது காண்க. நின் புகழ் = உன் புகழ்.
அல் என்பது அ என்றும் குறையும் என்பதால் அ + நீ + அன் = அந்நியன்
என்றும் ஆகும். நகரம் இரட்டித்தது. மற்றும் முன் கூறியதுபோல நீ குறிலாகிற்று.
நீ என்பது நீக்கப் பொருளது என்பதை முன் இடுகையில் விளக்கியுள்ளேன்,
http://sivamaalaa.blogspot.sg/2016/02/blog-post_13.html
அதையும் மறுபார்வை செய்துகொள்ளுங்கள். நிவாரணம் என்ற சொல்லில்
நீ குறுகியுள்ளது. நீ + வரு+ அணம் > நிவாரணம் . நீங்கி வருதல். நீக்க நிலை அண்மி வருதல் என்று விரிக்கலாம் எனினும் ஒன்றே. இந்தச் சொல் எங்கும் பரவிப் புகழ் பெற்ற சொல். நீ . என்பதே நீங்குதல்
அடுத்து அயல் என்பது காண்போம்.
குறிப்பு:
பழனி என்பதில் பழம் நீ என்பது நி என்று குறுகிற்று என்ப

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.