மன்னுதல் என்பதொரு வினைச்சொல். இது முன்னுதல் அதாவது
சிந்தித்தல் என்ற சொல்லின் திரிபு. அன்றி மன்னுதல் என்று இன்னொரு சொல்லும் உள்ளது. அதற்கு நிலைபெறுதல் என்று பொருளாம்.
முன் > மன் > மனம். (அம் விகுதி ).
சில சொற்கள் முதனிலை நீண்டு விகுதிபெறாமலும் தொழிற்பெயராகும்.
இப்படி அமைந்ததே மான் என்னும் சொல். மான் எனின் மனம் என்று பொருள். மான் என்னும் விலங்கு, ஏனை மான்கள் ஆகியவற்றுக்கும் இதனுடன் தொடர்பில்லை
2 | அத்தன் அமைத்த உடல் இரு கூறினில் சுத்தம் அது ஆகிய சூக்குமம் சொல்லுங்கால் சத்த பரிச ரூப ரச கந்தம் புத்திமான் ஆங்காரம் புரி அட்ட காயமே ( திருமந்திரம் ) இங்கு புத்தி மான் எனின் புத்தியும் மனமும் ஆங்க்காரமும் என்பது. . |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.