Pages

வெள்ளி, 11 டிசம்பர், 2015

சிவஞான போதத்திலிருந்து...(பாடல் 2)

இப்போது சிவஞான போதத்திலிருந்து ஒரு பாடலைக் கண்டு
இன்புறுவோம்,

இது அந்நூலின் இரண்டாவது பாடல்.

அவையே தானேயாய் இரு முதலின்
போக்கு வரவு புரிய ஆணையின்
நீக்கம் இன்றி நிற்கும் அன்றே.   (2)

அவை என்றது:  உலகில் உள்ளவற்றின் தொகுதியை.
தானேயாய் :  (அவை அனைத்தும்) தானேயாக  
நீக்கம் இன்றி:  வேறுபடாதவாறு.
நிற்கும் :  நிலவும், இயங்கும் என்பது.

போக்கு என்றார் இறப்பினை,
வரவு:  பிறப்பு.

இரு முதலாவது நன்மை தீமை அல்லது நல்வினை தீவினை.
இருமுதலின் ‍-  நல்வினை தீவினை ஆகிய காரணங்களால்.

ஆணையின் : என்பது இறைவனின் ஆற்றலினால் என்றற்கு 

. தானவ னாகிய தற்பரந் 2தாங்கினோன்
ஆனவை மாற்றிப் பரமத் தடைந்திடும்
ஏனை யுயிர்வினைக் கெய்து மிடஞ்சென்றும்
வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே..    2134   

என்பது  திருமந்திரம்.

அவையே  தானேயாய்  என்ற போதப் பாடலினோடு ஒப்பிடுக.   2தற்பரம்   என்பது  தானே பரமென்று  உணர்தல்.   தன்  + பரம் = தற்பரம்.    பர + அம்  =  பரம்.  எங்கும்  பரந்து  நிற்கும் இறை .

பிறந்த குழந்தையைப் புதுவரவு என்றும் கூறுவதுண்டு.  புதல்வர் என்பது இக்கருத்தில் அமைக்கப்பட்ட சொல் ஆகும்.  புது + அல் + வு + அர்   =  புதல்வர் .  இங்கு  அல்.  வு. அர்  மூன்று விகுதிகள் புகுத்தப் பட்டுள்ளன  இந்தப் பாடலில் வரவு  என்பது புதுவரவு  போன்ற கருத்தமைப்பே  ஆகும், பேச்சிலும் போய்விட்டார் என்பது இறப்பு  குறிக்கும்,    தொடர்ந்து நடைபெறுவதால் போக்கு வரவு என்றார்.

இவ்வுலகின் அனைத்தும் இறையாகிய அவனே ஆகி  நீக்கம் அற நின்று   தன்  ஆற்றலினால் இருவினைகளின் பயனாய்ப்  பிறப்பினையும் இறப்பினையும் நிகழ்த்துகின்றான் என்றபடி.  ஆணை என்பது ஆற்றல் .
நீக்கமற  நிறைந்திருக்கும்  பரிபூரணானந்தம்  என்று இறைவனைப் போற்றினார்  தாயுமானவரும் 

அன்றே  :    இது அசைச்சொல்.  ( இடம் நிரப்பிப்  பாடலை  நிறைவு செய்துவைக்கும் சொல். )   அல்லவோ   அல்லோ என்பனபோல்.   கேட்போனின் இசைவை  வெளிக்கொணரப் பயன்படுத்தப்படும்  சொல் எனினும்  அது,  

இது  தொடர்[பான கருத்துகள் சில  அடுத்த இடுகையில்  காண்போம்,

ஆன்மா  அல்லது ஆத்மா பற்றிப் பேசுவோம்   .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.