Pages

வியாழன், 10 டிசம்பர், 2015

பிரபஞ்சம் அஞ்சுகம் அஞ்சாலி

உலகம் என்பதைக் குறிக்கத் தமிழில் பல சொற்கள் உள்ளன.   ஆனால் பிரபஞ்சம்  அல்லது ப்ரபஞ்சம்  என்ற பதத்தையும் பயன்படுத்தி வருகிறோம்.

இந்தச் சொல் எப்படி அமைந்தது என்பதைக் காண்போம்.

நிலம், தீ, நீர், வளி விசும்பு என்ற ஐந்து பூதங்கள் . பூதங்கள்  என்றால் இறைவன் புதிதாகப் படை த்தவை.  புதிதாக என்றால் தொடக்கமாகப் படைத்தவை.  புது + அம்  = பூதம்.  இன்னொரு வழியில் சொல்லவேண்டுமானால் முன் இல்லாதிருந்த நிலையில் புதிதாகத் தோன்றியவை.

இந்தப்  புதியனவாய்த் தோன்றிய  ஐந்தும் கலந்த அமைப்பே உலகம்.
தொல்காப்பியர் சொன்னபடி :

"நிலம்தீ  நீர்வளி விசும்போ டைந்தும் 

கலந்த மயக்கம் உலகம் ஆதலின். "

ஆகவே உலகம் பிறக்க ,  முதற் பிறந்த ஐந்துமே உலகம்.


ஐந்து என்பது அஞ்சு என்று திரியும். பேச்சிலும் அஞ்சு என்பதே வழங்கும்.  

எடுத்துக்காட்டு:

" அமைச்சு  அரசேய்ப்ப  அஞ்சவத் தைத்தே " (   சிவ . போ , 4  )

அஞ்சுகம்:   அஞ்சு ​+  உகம் ,

உகம் <=  உக + அம்  ,   உக என்பதில் ஈற்றகரம்  கெட்டுப்  புணர்ந்தது.  ஐந்தை உகந்தது என்று பொருள்.(   ஒரு கிளி, ஒரு மெல்லாடை   )

அஞ்சாலிகள் añcālikaḷ  வரவை ஐந்தால் வகுப்போர். அஞ்சு +  ஆல் + இ.n. < அஞ்சாலி. Cultivators, so called because they are entitled to only one-fifths of the produce of their cultivation, the remainder being paid to the king; நிலவருவாயில் ஐந்தி லொருபங்கை மட்டும் வைத்துக்கொண்டு நான்கு பங்கை அரசனுக்குக் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்படும் குடிகள். (R.)    (பேரகராதி )  

இனி,   பிரபஞ்சத்துக்கு வருவோம்.

பிறப்பு + அஞ்சு + அம்  =  பிறப்பஞ்சம்  >  பிரபஞ்சம் >  ப்ரபஞ்சம் .

முதலில் ஒரு "ப் "  நீக்குக.

அப்போது பிறபஞ்சம்  வரும்.

தமிழில் உள்ள இந்த "ற -வுக்குப் பதில் "ர "-வைப்  போடுக .

இதில் ஒரு பெரிய மாற்றம் இல்லை.  பிரபஞ்சம் ஆகும்.

அப்புறம் ப்ரபஞ்சம்  என்று அழகாக வரும்.

இனிப் பிரிக்கும்போது  ப்ர  +  பஞ்ச  என்று  மாற்றிப் பிரிக்க.

சொல் அமைந்த விதத்தையே  மறைத்துவிடலாம்.

அதுதான்  திறமை.


 Note:Hackers have changed the spelling  of   certain words in this post   and rendered it   unintelligible. in certain respects.  We have restored it   We shall review it after an interval. 



இது 26.12.2017ல்   மறுபார்வை   செய்யப்பட்டது.      ஆனால் எதையும்  மாற்றவில்லை.    மீண்டும்  பார்க்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.