Pages

செவ்வாய், 8 டிசம்பர், 2015

வாய்தா

வாய்தா என்ற சொல் உருது மொழியிலும்    வழங்குகிறது.   தமிழ்  நாட்டிலும்  சிற்றூர்களில் வழங்குகிறது.  நிலம் வைத்திருப்போர் கட்டவேண்டிய வரியை இது குறிக்கின்றது.

வருவாயின் அல்லது நிலத்தின் வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட தொகையை  இறுத்தலே வாய்தா ,   இது மிகவும்  அழகாக அமைந்த ஒரு சொல்.  நாட்டு வழக்காகிய இச்சொல்லை  அமைத்து  அசத்தியவர் யார் என்பது தெரியவில்லை,  உருதுமொழிச் சொல் என்று தமிழாசிரியர் கருதினர்.

இந்தச் சொல்லைப் பற்றித்   தமிழ் வாத்தியார்கள்  சிந்திக்கத் தொடங்கியது முஸ்லீம்  அரசர் காலத்தில்.  ஆகவே   அவர்கள் உருது என்றனர்.  அதற்குமுன் சங்க காலத்தில் பேச்சு வழக்கில் அது இருந்ததா என்பதை  அறிய வழி ஒன்றுமில்லை.  சங்கப் புலவர்களின் சொற்றொகுதியில்  இலக்கியங்கள் வாயிலாக கண்டுகொள்ளப்படாத சொல்லைப்   பேச்சில் வழங்கியதா என்று கண்டுபிடிக்க வழி இல்லை.  தமிழாகவும்  இருக்கலாம்.  அல்லாமலும் இருக்கலாம்.

உருது மொழி பிற்காலத்தது.  தெக்காணி  மொழியில் இருந்து உருவாகியது
என்பர்.  இப்படிச் சொன்னால்  மேன்மைக் குறைவாகப் படுவதால்  இதைச் சிலர்  மறுப்பர்.  தென் + கணம்  >  தெற்கணம்  >  தெக்கணம் >  Deccan >  DeccANi >  தெக்காணி  > தக்காணி.   எனவே  தென் கணத்தே தோன்றி வளர்த்ததே உருது,  இதைப் பேசியவர்கள் முஸ்லீம்கள்.   அரபி எழுத்துக்களை பயன்படுத்தி எழுதினர்.  அரபியில் குர் ஆன்  வாசிக்க அறிந்தோருக்கு இந்த நிலை மிகவும் வசதி,

வருவாயிலிருந்து தரப்படும் தொகையை  வருவாய் + தா      என  அமைத்து    அதைச்  சுருக்கி   (வரு என்பதைக்   குறைத்து )  வாய் + தா  =  வாய்தா என்றனர்.
கணக்கு எழுதும்போது   வருவாயில் தந்தது  என்று  முழுவதையும் எழுதி நேரத்தை  ஒழித்துக்கொள்ளாமல்  வாய்*தா  என்று எழுதிக்கொண்டு  மிச்ச நேரத்தில் சுக்கு நீர் அருந்தி மகிழலாம்.  இலக்கணம் விளக்கெண்ணெய் எல்லாம் புலவன்  பேசிக்கொண்டிருப்பான்.     என்ன என்ன விளைந்தது என்று எழுதவேண்டுமானால்  து பரு ;  க பரு  என்று எழுதினால் போதாதா?     துப் பரு =  துவரம்பருப்பு ;  கப்பரு =   கடலைப் பருப்பு. என்று  புதுமை  செய்துகொள்ளும் திறனுடையார்  வணிகர்.

உபரு :     உளுத்தம்பருப்பு. என்றும்  எழுதலாம்.   தாள்  மிச்சம்.

வாய்தா   என்ற சொல் போல் அமைந்தது தான் che'Gu  என்ற மலாய்ச் சொல்லும்,    Incik  Guru   ( Mr  Teacher)     என்பதே  அங்ஙனம் அமைந்தது,   இதில்   பாதி.  அதில் பாதி.   இதைப் பற்றி  முன் எழுதியுள்ளோம்.

http://sivamaalaa.blogspot.sg/2015/10/etc.html

You will find more examples of similar word formation at the above post,



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.