Pages

வெள்ளி, 16 அக்டோபர், 2015

The truth about our puranas.

பழங்காலத்தில் அரச குடும்பங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை  அக்குடும்பத்தினரின் இயற்பெயர்களுடன் உள்ளபடி எழுதினால், அரசியலார் வந்து உதைத்து அடித்து  நையப்புடைத்துவிடுவார்கள். இதற்கு என்ன வழி என்றால் அதை மறைத்துக் கொஞ்சம் அறிந்தவர்கள் முழுமையாக  அறிந்துகொள்ளும் விதமாக  எழுதவேண்டும். இப்படி எழுந்தவைதான் பல புராணங்கள் என்ற தொன்மங்கள்.  அவை புனைவுகள்  என்கையில்,  அவை முழுவதும்  புனைவு என்று நினைத்துவிடலாகாது. 

உண்மை நிகழ்வுகளை மறைத்து எழுதப்பட்டவை.  ஆகவே அவை மறை என்பது பொருத்தனமான பெயர்.

ஓர் அரசன் சில வேளைகளில் மனிதனாய்ச் சிந்தித்து முடிவு  செய்கிறான்.  அப்போது  தொன்மப் புலவர் அவன் மனித உரு எடுத்ததாகக் கதையில் சொல்வார் .  சில சமயம் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தன் விருப்பபடி முடிவுகளை  அரசன் மேற்கொள்வான். மந்திரி தந்திரியின்  பேச்செல்லாம் எடுபடாது.
அப்போது அவன் எருமைபோல் போகிறான்.  புலவர் அவன் எருமை உருவெடுத்ததாக எழுதுவார்.   அவர் காலத்தில் நீங்கள் இருந்து இதை நடித்துக் காட்டினால் உங்களுக்குக் கதை உடனே  விளங்கும். இப்போது . ஆய்வுக் கண்ணோட்டத்தில் இவ்ற்றைக் காணவேண்டும்.

வேண்டிய நேரத்தில் வேண்டிய உருவை அடைவான் என்றால் இதுதான் பொருள்.

அரசனின் படைஞர்கள் வந்தால் , நாங்கள் கடவுளை எழுதுகிறோம் என்று எளிதில் சொல்லித் தப்பிவிடலாம்.

மகிழாசுர மருத்தினி கதையைப் படித்துப் பாருங்கள்.

இதில் வரும் மகிஷி  (மகிழி)  மிக்க மகிழ்ச்சியுடன் காலங்கழித்தவளாக இருந்தாள் என்பதே உண்மை.

பிரம்மா, விஷ்ணு  சிவன் எல்லாம் இறுதியில் வருவார்கள்.    இறுதியில் மூவேந்தரும்  அல்லது அவர்களின்  பதிலாளர்களும் வந்திருப்பார்கள். அவ்வளவுதான்.  பல புராணங்கள் உங்களை ஏமாற்ற எழுதப்பட்டவை அல்ல. சில நிகழ்வுகளை மனத்தில் வைத்துப் புனையப்பட்டவை.  காட்சி இடத்தை 
வடக்கே மாற்றிவிட்டால் ...... அரசனிடமிருந்து முழுமையாகத் தப்பித்துவிடலாம். ஒரு நல்ல புனைகதையும் கிட்டும்.  காலம் செல்லச் செல்லப்  புதிய புனைவுகளும் புகுந்து  சுவையும் மிகுந்து  நீங்களும்  மகிழ்ந்து...................... ........ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.