ஓடல் உடற்பயிற்சி பெண்களுக் கில்லையெனும்]
காடர் கறைக்கோளிக் காலத்துக் --- கூடுவதோ
மேடேறி நிற்கும்நம் ,மெல்லியலார் வீழ்ச்சியைத்
தேடி நிலைப்படுத்தும் தீது.
Australia Islamic school 'bans running' over virginity fears
https://sg.news.yahoo.com/australia-islamic-school-bans-running-over-virginity-fears-033224708.html
ஓடல் = ஓடுதல், ஓடும் பந்தயம் அல்லது பயிற்சி.
காடர் = காட்டு மனிதர் (போன்றோர்)' சிந்தனையில் முன்னேற்றம் இல்லாதவர்கள்.
கறை - கரும்புள்ளி; தெளிவற்ற.
கோள் = கொள்கை.
கூடுவதோ - ஒத்துவருமோ.
மேடுஏறி -- முயன்று முன்னேறி.
வீழ்ச்சியை - முன்னேற்றத் தடையை;
நிலைப்படுத்தும் =(வீழ்ச்சியை) அதிலிருந்து எழ விடாமல் தடுத்துவைக்கும்.
உறுதிப்படுத்தும்
காடு+ அர் = காடர் இடைக்காடர் என்ற புலவர் பெயரும் திருவெண்காடர் என்ற பெயரும் நோக்குக.
காடு + ஆன் = காட்டான். இங்கு டகரம் இரட்டித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.