கிஞ்சித்தும் - பொருள்.
இது கிஞ்சித் என்ற வடசொல்லில், உம் சேர்ந்தது ஆகும். உம் என்பதொரு தமிழ் இடைச்சொல்.
இங்கு "கிம்" என்ற ( வட )சொல்லுடன் "சித்" என்ற வடமொழி விகுதி சேர்ந்துள்ளது. சுட்டுக்கள் அல்லாத பதிற்பெயர்களில் (pronouns) இதுவும் ஒன்று.
கிஞ்சித் = ஏதோ ஒரு பொருள் என்பது.
யாதும் ஐயமில்லை என்பதை, கிஞ்சித்தும் சந்தேகமில்லை என்று எழுதுவர்.
எனவே இதை விலக்கி "யாதும்" "எதுவும்" என்று எழுதுக.
கிம் என்பது உண்மையில் கொம் என்ற பழந்தமிழ்ச் சொல்லின் திரிபு.
கொம் > கொம்+சு+அம் = கொஞ்சம். சு-வும் அம்-மும் விகுதிகள்.
கிம்+சித் = கிஞ்சித். சித் விகுதி. சு(தமிழ் )> சித். (வடமொழி ) விகுதியும் திரிந்தது.
Compare English: "whatsoever".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.