காதலர் உழையர் ஆகப் பெரிதுவந்து
சாறுகொள் ஊரில் புகல்வேன் ; மன்ற
அத்த நண்ணிய அங்குடிச் சீறூர் ;
மக்கள் போகிய அணிலாடு முன்றில்
புலம்பு இல் போலப் புல் என்று
அலப்பென் தோழி அவர் அகன்ற ஞான்றே
அணிலாடு முன்றிலார் பாடியது. குறுந் 41.
காதலர் உழையர் ஆகப் பெரிதுவந்து - காதலர் பக்கத்தில் இருக்க, மிகவும்
மகிழ்ந்து ;
சாறுகொள் ஊரில் புகல்வேன் - திருவிழாக் காலத்தில் ஊர் மகிழ்வதுபோல் நான் மகிழ்வேன் ;
மன்ற --உறுதியாக;
அத்த நண்ணிய அங்குடிச் சீறூர் - பாலை வனத்தில் உள்ள அழகிய சிறிய ஊர்;
(அங்குள்ள )
மக்கள் போகிய அணிலாடு முன்றில் -- வீட்டில் உள்ளோர் போயபின்பு அங்கு வந்து அணில்கள் முற்றத்தில் ஆடும்;
புலம்பு இல் போல -- தனிமையான இல்லம்
போல;
புல் என்று அலப்பென் -- பொலிவு இழந்து வருந்துவேன்;
இது தலைவி தோழிக்குச் சொல்லியது. காதலர் பிரிந்து சென்று விட்டார்.அவர் நீங்கிய போது எப்படி இருந்தது எனக்கு: வீட்டிலுள்ளோர் குடிமாறிப் போய்விட்ட சிறு குடிலில் முற்றத்தில் ஆளில்லாத காரணத்தால் அணில்கள் வந்து அங்குமிங்கும் ஆடிக்கொண்டிருக்கின்றன; அது தனி இல்லம் . பார்க்கப் பரிதாபமான நிலைமை , அந்தத் தனிக் குடிலாகிவிட்டேன். துன்பம் தாண்டவமாடு கிறது தோழி . புல் இறக்கம் இழிதல் முதலியன குறிப்பது. downcast . அலப்பென் என்பது அலப்பேன் என்பதாம். ஏன் வினா என்பாருமுளர். அலத்தல் வருந்துதல் .
அவர் இருந்தபோது என் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை; திரு விழாக்காலத்தில் ஊர்`மகிழ்வதுபோல மகிழ்ந்துகொண்டல்லவா இருந்தது என் நெஞ்சகம் ?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.