ஒரு மாடு வண்டியொடு போதும்== சாலை
ஓரமாய்ப் போகையில் மென்காற்று மோதும்;
தெருவோரம் புல்லுண்டு மேயும் == அந்தத்
தேனான நல்வாழ்வில் காசெங்கு தேயும்?
உந்துகள் வந்தவிந் நாளில் == நமை
உய்த்ததெண் ணெய்பணப் பைகளோ காலி
வந்துறும் நாகரிக வண்ணம் == இதை
வாழ்த்தவோ மாட்டினை வாழ்த்தவோ சொல்லும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.