Pages

ஞாயிறு, 8 மார்ச், 2015

ஆனென்ற மாடுதரும்

ஆனென்ற மாடுதரும் அம்மென்னும் அழகதனை
ஆங்கறிதல் ஆனந்தமே
தானென்ற சொல்லதனில் தம்மென்று வருவதனைத்
தக்கபடி ஈற்றிலிட்டே
கூன்குன்று நன்மைகொள் எம்முன்னோர் உருதருசொல்
கோதிலதே ஆனந்தமே!
மீன்குன்றும்  முந்நீரில் மென்பாலோ   
குறைதலிலா
மேலிடைநன்  மக்கள்சொல்லே.

ஆன் = பசு;  அம்=அழகு; 

தான்> தாம் >தம்:  இதை ஈற்றில் இட்டால் = விகுதியாக்கினால்;

கூன் குன்று  நன்மை:  குறைவு என்பது சிறிதளவே உள்ள நன்மை.
முழுதும் குறைவானதும்  முழுதும் நிறைவானதும் ஆகிய பொருள்கள் உலகில் இல்லை. தீமை இருப்பினும் பெரிதும் நன்மையாய் இருக்கவேண்டும். விடம் (விஷம்) கூட மருந்தாகி நன்மை செய்வதுண்டு. 

உரு‍தரு சொல் ‍  உருத்தரு சொல். மெய், சந்தத்துக்காகக்  குறுக்கப் பெற்றது. மேல் அடிகளில் நான்காம்  சீர் நோக்கியது.

கடலில் மீன் வளம் குன்றிவிட்டாலும், ( நிலத்து)  மாட்டின் பால்வளம் குன்றாது   
நாட்டின் பொருளியலில் மகிழ்ச்சிப்பெருக்கம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.