முன் இடுகையில் வே > வி திரிபு பற்றி கண்டோம். வே> வி என்று திரியும் என்பது வி > வே என்று திரியும் என்றும் பொருள்படும். மக்கள் சொற்களை பலுககுவதற்கு எது எளிதானது என்பதைப் பொறுத்தே இத்திரிபுகள் அமைகின்றன.
இனி இன்னோரு திரிபு கண்போம்.
வேண்டல் - விண்ணப்பம் என்பவை ஏறத்தாழ ஒரே பொருளுடையவை.
வேண்டல் என்பதில் அல் இறுதி நிலை அல்லது விகுதியாய் நிற்கின்றது.
விண்ணப்பம் என்பதோ, விண் என்பதுடன் "அப்பு+ அம் " என்பனவும் உள்ளன.அப்பு என்பது அனுப்பு என்பதன் இடைக்குறை போல் தோன்றுகிறது. அன்றி, அப்பு - ஒட்டு என்று பொருள் கொண்டாலும் இழுக்கில்லை.
விகுதி ஆய்வை விட வேண் > விண் என்பதே நாம் ஆயப் புகுந்தது.
வேண் என்பதில் உள்ள பொருண்மை விண் என்பதில் இல்லை ஆதலினால்,அப்பு (அனுப்பு ) என்ற இடை நிலை
தேவைப்பட்டது போலும்.
வே > வி திரிபுக்கு இது நல்ல உதாரணம் ஆம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.