இப்போது "அபராதம்" என்பதைக் கவனிப்போம்
அவம் என்பது அவ > அப என்று நின்றது. அவமாவது கெடுதல் பொருள் தருவதொரு சொல்.
இனி ராதம் எனற்பாலது.
இறுத்தல் - "காசு கட்டுதல் " அல்லது பணம் கட்டுதல்.
இறு + அது + அம் = இறதம் > றதம் > ரதம் > ராதம் .
அது என்பது சொல்லாக்க இடை நிலையாக வருமென்பது பருவதம் (< பரு ), , காவதம் (<கா ) என்பனவற்றில் காண்க. ( இது என்பதும் கொள்க சுரோணிதம்(<சுர ) கணிதம் (<கணி, கணித்தல் ) )
அப + ராதம் = அபராதம் (தண்டம் ) ஆகும். Having to pay a fine is bad for your purse. It is naturally "avam". That's why this word started with "apa-"
இஃது தமிழ் மூலங்களையுடைய ஒரு சொல்.
அவமாகப் பணம் இறுத்தல் என்பது.
நன்கு திரித்துப் புனையப்பட்ட சொல்.
அவி + அம் = அவம் - முன் இடுகைகளில் காண்க
"அவ இறதம்" எனில் அஃது ஒரு சொன்னீர்மைப் படாமை அறிக. "அவவிறதம்" எனில் இன்னா ஓசை தரும் . இவையெல்லாம் நல்லிசைப் புலவன்மார் புனைதக்க வல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.