இப்போது இந்தியத் தேர்தல் வெகு விரைவாக வந்துகொண்டிருக்கிறது. தேர்தல் சமயத்தில் பயன்படுத்தும் ஒரு சொல்லையாவது நாம் ஆராயவேண்டாமா?
அதற்காக நாம் இன்று நுணுகி நோக்கப்போவது "சாவடி " என்னும் சொல். எங்ஙனம் அமைந்தது என்று அச்சமின்றி நோக்குவோம். காரணம் வைப்புத்தோகையை நாமொன்றும் இழந்துவிட மாட்டோம்.
சாவடி என்பது தலை போன சொல். அது கல்வெட்டுக்களில் "உசாவடி " என்று வந்துள்ளது. உசாவுதலாவது கேட்டறிதல். அடி என்பது யாரையும் தாக்கச் சொல்வதன்று . அடு + இ = அடி. அடுத்துச் சென்று (கேட்டறி) என்பதாம். அடுத்தல் - அருகிற் செல்லுதல்.
இதை முன் ஓர் இணைய தளத்தில் ஆதாரத்துடன் எழுதியிருந்தேன். அது இப்போது கைவசம் இல்லை. இருப்பினும் இதுதான் சொல்லவிழைந்தது ஆகும்.
சாவடி நல்ல தமிழ்ச் சொல் ஆகும்.
சாவடி என்பது வேறு. "சாகடி" என்பது வேறு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.