Pages

ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

ஆனந்தம்

 ஆன்மாவின் அடிப்படைக் குணம் அல்லது பண்பு  அளவற்ற மகிழ்ச்சி என்று சொல்லப்படுகிறது,   இதற்குக் காரணம் அஃது உடலோடு கூடியிருக்கும் தன்மையே  ஆகும். இதுவும் ஆனந்தம் என்ப்படுகிறது. இந்தப் பொருளில் இது இப்போது வழங்குவதில்லை எனலாம். இது சத்து, சித்து எனவும் கூறுவர்.

இஃது மட்டுமின்றி,  ஒன்பது வகைப்பட்ட குபேரநிதிகளில் நந்தமும் ஒன்றெனப்படும்.  ஆ நந்தம்  என்பதால்  ஆ= ஆக்கந்தருகின்ற,  நந்தம் -  செழிப்பு என்பது. இந்த நந்தம் , நன்று  என்ற சொல்,  நல்+ து>  நன் து > நந்து+ அம் என்று வந்து, நந்தம் :   செழிப்பு  , வளர்ச்சி என்று பொருள்தரும்.  நல் > நன் என்று வருவது லகர நகரத் திரிபு.   மேலும் இன்னொரு வழியில் நோக்கின்,  நரந்தம் என்பது இடைக்குறைந்து, நந்தம் என்றாகி  இனிய மணமாகிய நன்மை என்றும் பொருள்படும்.  நந்துதல் ஆதலுமாகும் என்பதால்,  ஆனந்தம் என்றும் கொள்ளற்குரியது.  

நந்தம், நந்தல் என்பதற்குக் கெடுதல் என்ற பொருளும் உண்டு.  மிகுந்த நலங்கள் உண்டாதல்,  கெடுதலுக்கும் இட்டுச் சென்று  அழிவும் தருமாதலின்,  கெடுதற் பொருள் ஏற்பட்டுள்ளது.  நன்மையும் தீமையும் பிரிக்க இயலாதவை என்பதை உணர்க.    அதிகம் பொன் வைத்திருக்கும் ஒருவன் திருடனால் கொல்லப்பட்டு அவன்றன் பொருள் எடுத்துச்செல்லப் படுதல் காண்க.  தீதும் நன்றும் ஒருகளத்தில் தோன்றக்கூடியவை.

இவை நிற்க,  ஆனந்தம் என்பது   ஆக நன்று>  ஆ + நன் + து+ அம்  > ஆனந்தம் ஆகும். இதில் நல் > நன் என்றானது.  ஆகவே இது தமிழ் மூலமுடைய சொல்லே ஆகும்.  பனி என்ற சொல், பல்> பன்> பனி என்றாதல் காண்க.

ஆ+ நன்(  மை ) + து + அம் >  ஆனந்தம் என்றும் காட்டலாம். ஆநந்தம் என்றும் ந-வரவும் எழுதப்படுதல் உள்ளது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.