Pages

வியாழன், 23 ஏப்ரல், 2026

மனம் என்னும் சொல்லும் போல்வனவும் உருபு ஏற்றல்

 மனம் என்ற சொல்லில் இல் என்ற உருபு வந்திணைந்தால், மனத்தில் என்று வரவேண்டும். இந்தக் குறளைப் பாருங்கள். தெய்வப் புலவர் திருவள்ளுவ நாயனார் இக்குறள் வெண்பாவை எவ்வாறு யாத்துள்ளார் என்று:-

மனத்துக்கண் மாசிலன்  ஆதல் அனைத்தறன்  

ஆகுல நீர பிற

என்பது  அது.

கண் என்பது உருபு.   மனத்துக்கண் என்றால் மனத்தில்.  இது மனம்+ அத்து+ இல் என்பதுதான்.

அறம் என்பதும் உருபு ஏற்க,  அறத்தில் என்று வரும்.  இது அறம்+ அத்து + இல் என்பதுதான்.  கண் என்பதை இணைப்பதாயின், முன் கூறியவாறே, அறத்துக்கண் என்று வரவேண்டும்.

அத்து என்பது சார்ந்தும் இயைந்தும் வரும் சொல்.  அதனால் சாரியை எனப்பட்டது.  இது அது என்பது தகரம் இரட்டித்து வந்தது ஆகும்.  அதாவது தகர ஒற்று இரட்டித்தது.  அ த்+த்+உ..

மனத்தில் என்ற சொல் பாடல்களில் இரட்டிக்காமலும் வரும். காண்க:

பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை  கொள்ள,

உரலில் கட்டி,  வாய்பொத்தி, கெஞ்சவைத்தாய் ----  கண்ணனை.

இங்கு மனதில் என்று வந்ததும் சரிதான்.  இப்படிக் குறுக்குவதற்கு கவிஞனுக்கு உரிமை உள்ளது. இதனைத் தொல்காப்பியமும் பிற இலக்கணங்களும் தந்துள்ளன. இது தொகுத்துக்கொள்ளும் உரிமை.,

பிர-மனும்  இந்-திர-னும் மன-தில்-பொ  றா-மை-கொள்-ள

இங்கு த்  என்னும் வல்லொற்று நீங்கியவாறு  காண்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.