Pages

வெள்ளி, 10 ஏப்ரல், 2026

சரவணம், சரவணன், சரவணப்பொய்கை

 இச்சொற்களை இப்போது உணர்ந்துகொள்வோம்.

இதற்குரிய வினைச்சொல்: சரிதல் என்பது.   இதிலிருந்து சரம் என்ற சொல் தோன்றுகிறது.  சரிதல் மற்றும் சரம் என்பன அசைவுக் குறிப்பின ஆதலின்,  அசரம் என்னும் சொல்  அசைவின்மையைக் குறிக்கிறது.  அசர்தல் கவனக்குறைவைக் குறித்தாலும்  இஃது ஒருவன் இடைநேரத்தில் அசைவின்றி இருத்தலையே குறிக்கின்றது.  கவனத்துடன் இருத்தல் -  அசைவுண்மை என்று கொள்ளப்படும்,  ஆகவே அசைவின்மை அசையாமையைக் குறிக்கும். அதாவது ஒன்றும் செய்யாதிருத்தல். கொஞ்சம்  அசந்துவிட்டால்,  திருடிவிடுகிறார்கள் என்ற வாக்கியத்திலிருந்து இது தெரிகிறது. . '' அசந்தா மிளகாய் அரைச்சிடுவானாம்''   என்பதும காண்க.

அயர்வு என்பது இயற்சொல்லாக  இருப்பதால்,  அசர்தல் என்பது திரிபு  என்னலாம்.  அசர்தல் என்பதை  அசைதல் என்பதனோடும் தொடர்பு படுத்தலாம் என்றாலும் பொருள்முரணால்,  அசை+ அறுதல் > அசறுதல் > அசர்தல் என்னலாம்.  இன்னொரு சொல்லுடன் சேர்கையில்  றுகரம் என்ற வல்லினம்  ர் என்ற இடையின மெய்யாய்த் திரிகின்றது.   அசை அறு  > அசறு> அசர்தல் > அசரம்.   இவ்வாறின்றி,  சரம்> அல் சரம் > அசரம் என்றுமாகும்.   அல்=   அல்லாதது. இது கடைக்குறைந்து : அ என்று முன்னொட்டு  ஆயிற்று.  

இனிச் சரவணம் என்பது:  

சரிதல் வினையிலிருந்த் பிறந்த இச்சொல், இயக்கம் குறிப்பது தெளிவு.  இது இச்சொல்லின் ஆதிப் பொருள்.  ஆனால் இற்றை வழக்கில் இது ( சரம் என்பது)  ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக அமைந்திருத்தலையே குறித்தது. இதற்குக் காரணம் அறிய இயலாத ஒன்றன்று.  சரிந்த பொருள், சரிவான நிலையிலே இருந்து கெட்டி நிலையை அடைந்துவிடுதலும் இயற்கையில் காணப்படுகிறது. இந்நிலையில் இயக்கமின்மையையே இச்சொல் குறிக்கிறது.  சரிந்த பொருள் சரிவு நிலையிலிருந்து படுக்கை வாட்டமாக மாறாமை,  இயக்கத்திலிருந்து இயக்கமின்மை நிலைக்கு வருவதுதான். சரவெடி என்பது ஒன்றன்பின் ஒன்றாக வெடித்தல் என்று பொருள்படும்.

சரிந்த நிலையில் மேலும் சரியாமல் வரிசையாக நின்று நிலை காட்டுகின்றது. இந்நிலையில் வண்ணம் அல்லது நிலைபெறுதலை  சரவணம் என்கிறோம். வரிசைநிலை அடைதல்.  இவ்வாறு பூக்கள் இருக்க அழகுபெற்ற நீர்நிலை, சரவணப் பொய்கை  ஆகிறது.  இவ்வாறு நிலைபெற்று துதிக்கப்படுவது பராநிலை  ஆகிறது. பலநிறங்களில் இருப்பதும் ஒரே நிறத்திலிருப்பதும் இதனுள் அமையும்.   வண்ணம் என்பது நிலை என்ற பொருளிலும்  நிறம் என்ற பொருளிலும் அமைவதாம்.  ஏற்ப நாம் பொருளுரைத்தல் தக்கது.  சொற்கள் அமைதலுக்குப் பின் பொருள் மாறுதலும் பெறும், மாறாமலும் இயலும். இங்கு நாம் அமைப்புப் பொருளே கருதினோம்.  பின் அடையும் பொருளை விரித்துக்கொள்க.

எடுத்துக்காட்டு:  சரப்பலகை, வரிசையாக உள்ள  பலகை என்ற பொருளே தரும்.  அவை கடைகளில் அடைப்புப் பலகை என்பது,  விரிபொருள்.  தாமே அறிந்துகொள்ள வேண்டிய பொருளாகும்.

''சரவணம் சமஸ்கிருதம்'' என்றால் எப்படி? என்ன?

சரவணம் சமஸ்கிருதம் எங்கிறீர்களா?  அது சம+ கதம் உடைய சொல் என்று பொருள்.  சம - ஒப்புமையுடன்  கதம் - ஒலித்தல். எதற்கு ஒப்புமையாக என்றால் தமிழுக்கு ஒப்புமையாக என்று பதில் கொள்க. இவ்விரண்டு மொழிகளும் இணைமொழிகள் ஆம். சம் > சம என்பது பின் சம(ஸ்) என்று திரிந்தது. கதம் என்பது கிருதம் என்று திரிந்தது.  இவ்விரண்டையும் சேர்த்தால் '' சமஸ்கிருதம்'' என்ற பெயர் கிடைக்கிறது. என்றால், ஒன்றாக ஒலிக்கும் சொற்கள். இரண்டு மொழிகளின் ஒலியமைப்பும் ஒருப்போல அமைந்தவை என்று வங்காள மொழியறிஞர் எழுதியுள்ளார்.  சுனில் குமார் சட்டர்ஜீ  என்பது அவர் பெயர்.  இப்போது அவர் அப்படி ஏன் எழுதினார் என்று சிந்தித்தபின் இங்கு யாம் விளக்கியதைப் படித்தால் மொழியறிவு வந்துவிடும். இதுபோல பல சொற்களில் உதாரணம் காட்டமுடியும். அதனால்தான் இதையுணர்த அறிஞர்கள்  'தற்சமம்'',  ''தற்பவம்'' என்ற சொற்குறியீடுகள் உண்டாயின.  இதை மறந்துவிட்டு,  சமஸ்கிருதம் ஆரிய மொழி, கூரிய மொழி, கீரிய மொழி என்றெல்லாம் நினைப்பது  மூடமதேயாகும்.  உதாரணம் என்ற சொல்லைப் பாருங்கள். உது - முன் நிற்பது என்று பொருள். உது ஆ >  என்றால் முன் நிற்பதாக  ஆகுவது என்று பொருள்.  அண்- அண்மி நிற்பது.   அம் - அமைப்பு.  எல்லாம் சேர்த்தால்  ''முன் நிற்பதாக அண்மி நிற்கும் அமைப்பினதான சொல்'' என்று பொருள். அப்படியென்றால் எடுத்துக்காட்டு என்று இச்சொல்லைப் பயன்படுத்துகிறோம்.  தனித்தனியாகப் பிய்த்துப் பார்த்தாலும்,  சம கதம் என்பது புரிகிறதா?    கதம் என்பது:  கத்து,  இடைக்குறைந்து, கது. இதில் அம் சேர்ந்து கதம். இது திரிந்து கிருதம்,  அல்லது கிர்தம்.  இப்போது சமஸ்கிருதம் என்ற சொல்  கிட்டுகிறது. உதாரணம் என்பதும் இவ்வாறே அறிந்துகொள்ளத் தக்கது.

வெள்ளைக்காரனின் பொய்ச் சரித்திரத்தை நம்பி,   இதை ஆரிய மொழி, இந்தோ ஐரோப்பியம் என்றெல்லாம் கொண்டது ஆய்வின்மையே  ஆகும்.

சர்வம் (முன் இடுகை)  என்பதும் சரவணம் என்பதும் இவ்வாறே உணர்ந்து கொள்ளத் தக்கவையாகும்..

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.