Pages

திங்கள், 13 ஏப்ரல், 2026

பவனியும் பரவணியும்.

 பரவணி என்றால் பரவலாக அணிவகுத்துச் செல்வது.  அணிவகுத்துச் செல்லும்போது  இரண்டிரண்டாக,  அல்லது  மூன்று மூன்றாக ஆட்களை நிறுத்தி, அணிவகுத்துச் செல்லலாம். இப்படிச் செய்யாமல் ( அதாவது எண்ணிக்கை வரம்பின்படி நின்று பின் நடந்துசெல்லாமல் அமைப்பு இன்றி நடந்து சென்றால் அதுதான் பரவணி ஆகும்.

இது புரியவில்லை என்றால், எமக்கு எழுதிக் கேட்கவும்.  யாம் ஒரு படம் வரைந்து இதை விளக்க முற்படுவோம்.

பரவணி என்பது பர(வு) அணி என்ற இருசொற்களால் ஆன கூட்டுச்சொல். இது திரிந்து பரவணி> பரவனி>பவனி என்று ஆயிற்று.

சமஸ்கிருதத்தில் (அம்மொழியில் இருந்தாலும்)  இச்சொல்லில்  ணகரம் இல்லை. இந்தத் திரிபு சமஸ்கிருத மொழிக்குச் சென்றால்,  பவனி என்றுதான் வரவேண்டும். அல்லாமலும்  இருசொற்கள் புணர்த்தி அமைத்த சொல்லில்,  ணகரம் என்பது னகரமாக மாறிவிடும்.  இது தமிழிலேயும் நடக்கும். சமஸ்கிருதம் செல்லாமலே நடக்கும்.  இதுபோன்ற திரிபுகளுக்கு யாரும் நூல் எழுதவில்லை.  ஆதலால் அவர்சொன்னார் இவர் சொன்னார் என்று காட்டமுடியாது.

ஒருவரை ஒருவர் அணுகிச் சென்று பாசமுடன் உறவாடாமல்  அன்பு செலுத்தமுடியாது. அண்> அணுகு.  இனி அண்> அன்> அன்பு என்று இதற்குச் சொல் அமைகிறது. அண்பு என்றுதான் சொல் அமையவேண்டும் என்று எந்த இலக்கணவிதியும் தமிழில் இல்லை.  சமஸ்கிருதத்திலும் இல்லை. உம்மாலும் காட்டமுடியாது.

இதை இங்குச் சொல்லக் காரணம், எதற்கும் ஓர் ஆதாரம் காட்டவேண்டும் என்று சிலர் சொல்வதுதான். உலகில் ஆதாரம் இல்லாத உண்மைகள் பலவுள்ளன.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.