ஜீவன் என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். இது சீவித்தல் என்று வினையாகவும் வரும். இதற்குப் பல சொல் தோற்றங்கள் சொல்லப்பட்டிருந்தாலும், இதைத் தமிழ் மூலத்தது என்று ஆய்வாளர் சிலர் கூறியுள்ளனர்.
மனிதன் இறந்தபின் மீண்டும் மறுபிறவி கொள்கிறான் என்பது ஒரு கொள்கையாகும். மறுபிறவியில் நம்பிக்கை இல்லாதார் பலராயினும், நம்புவோரும் பலராவர். Lobsang Rampa முதல் பலர் பல நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி மறுபிறவி உண்டென்று கூறுவர். தமிழ்ச் சங்க காலத்திலும் மறுபிறவி நம்பிக்கை உடையோர் பலர் இருந்தனர்.
உயிர் > யிர் > ஜிவ் > ஜீவன், ஜீவித்தல் என்று வருதல் கூடுமென்பர். இது இலங்கை ஆய்வாளரின் கருத்து.
சீர் வருந்ந > சீவன்ன > சீவன் என்று வருதலும் கூடுமென்க.
சீர் மிக்கது என்பது புவி வாழ்வே என்பது இதன் கருத்தாக, உயிர்> உசிர்> சீர்> சீர்வன்ன > சீவன் என்றாகுமென்ப.
சிர் > சீர், வருந்ந என்பது வருகின்ற என்பது. இன்று என்ற சொல் இன்னு, இன்னக்கி என்றெல்லாம் பேச்சுமொழியில் வருகிறது. ஆகவே வருகின்ற என்பது வருகின்ன - வருன்ன , இதில் வரு என்பது வ என்று குறுகும். வரு என்ற மூலவடி, வந்த என்ற இறந்தகால வடிவத்தில், தன் ருகரமிழந்து, வந்த எனவாதல் அறிக. சீவன் என்பதில் இந்த வன் மட்டும் உள்ளது. வந்> வன். இதில் அன் விகுதிபோலும் அழகு வந்துவிட்டபடியால், அதையே இறுதிநிலை ஆக்கிவிட்டனர்.
வரு என்ற வினைப்பகுதியும் வருந்து என்ற வினைப்பகுதியும் இவற்றின் காலவினைத் திரிபுகளுடன் கலந்து மயங்குமாறு விளைதல், தவிர்க்கப்பட வேண்டியது ஆகும்.
உயிர் என்ற சொல்லே ஜீவன் என்று வந்தது என்று பிற அறிஞரும் கூறியுள்ளனர்.
தலைச்சொல் இழக்கை பல சொற்களில் வந்துள்ள காட்சி ஆகும். எ-டு: அரங்கன் - ரங்கன். இனி ரங்கா என்பது விளிவடிவம். பண்டை நாட்களில் கீழே நெடுஞ்சாண்கிடையாக விழுந்தோ, நின்று முன்வாட்டாகச் சாய்ந்தோ வணங்கிய கடவுள், ''சாய்மி'' என்பது சாமி ஆயிற்று.
சமஸ்கிருத மொழிச்சொற்கள் தமிழிலும் தமிழ்ச் சொற்கள் சமஸ்கிருதத்திலும் கலந்துள்ளன.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.