இப்போது சந்தா என்ற சொல்லைப் பார்ப்போம்.
இந்தச் சொல்லில் இரண்டு பகவுகள் உள்ளன. ஒரு சொல்லின் பகுதிச் சொற்களைத் தாம் பகவுகள் என்று குறிக்கின்றோம். பகவுகள் ஆவன:
அண்> சண்> சண்+தா> சண்தா > சந்தா ஆகும். இதைச்
சண்> சம்> சந்தா என்று குறிக்க, இன்னும் தெளிவாகும்.
முழுச்சொற்கள் வாக்கியத்தில் புணர்கையில் சண்+தா> ச ண்டா என்று வல்லொலி மிக்குப் புணரும். சொல்லாக்கத்திலும் கூட இவ்வாறும் வருவதுண்டு. எடுத்துக்காட்டாக, அண்> சண்> சண்டை. இறுதியில் வந்த ''தை'' விகுதி: சொல்லாக்கப் புணர்வில், டை என்று மாறிவிட்டது. தை என்பது இதில் விகுதி யன்று, விகுதி டை தான் என்று வாதிட்டாலும், இந்த வாதத்தினால் எந்தப் பெரும்பயனும் விளையப்போவதில்லை. இருவழிகளிலும் இதனை விளக்குதல் கூடுமென்று வைத்துக்கொள்வதில் ஒன்றும் இழுக்காது என்றுணர்க. மொழியில் போதுமான சொற்களின் தொகுதி வேண்டுமென்று முயற்சி செய்யும்போது, இதை எல்லாம் நுணுகி ஆய்தலினால் பயன் இல்லை.
''நயன்இல சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று''
என்ற பொய்யாமொழிப் புலவரின் வாக்கினை சிரமேற் கொள்க.
சண்+தை, சண்+டை என்ற இரண்டு சொற்களிலும், ஒரே அடியிலிருந்து இரண்டு சொற்களைப் படைத்தளித்தல் திறனே என்று கொள்க. விகுதிகள்தாம் மாறின. அடுத்துச்செல்லாமல் சந்தையு மில்லை, சண்டையும் இல்லை.
பண்டைக் காலத்தில், அடுத்துச் சென்றுதான் பணம் கட்டினர், சந்தா என்பதற்கு அதுவே பொருள். வாய்தா என்பதற்கும் அதுவே பொருள். இடம் என்றால் அதற்கு இன்னொரு சொல்: வாய். இச்சொல் பலபொருள் உள்ள சொல். இடத்திற்குத் தந்தது வாய்-தா. தா என்பது முதனிலைப் பெயராய்த் தருபொருள் குறித்தது.
வாய்தா என்பது : வாய் - இடம்; தா- தருவது. முதனிலைத் தொழிற்பெயராய், இங்குச் சொல்லின் பகவாய் வந்தது. நிலவரிக்கு இது பெயராய் வந்து, இங்கு வாய் - என்பது இடம் என்று பொருள்படும் தமிழ். அப்புறம் வாய் என்பது வாயென்னும் முக உறுப்பையும் குறிப்பதால், வாயினால் கேட்டுப்பெறுவது என்றும் பொருள்பட்டது. இது அரபுக்களினுடன் ஏற்பட்ட தொடர்பினால் அங்கும் சென்று வழங்கி, அரபுச் சொல் என்றும் நினைத்தனர்.
பல தமிழ்மூலங்களை அரபு மொழியிலும் காணலாம். அல் காதிப் என்போர் முன் காலத்தில் தமிழரிடை இருந்த காப்பியக் குடியினர் போல, நூல்கள் ஓதும் வகுப்பினர். ஸ்க்ரைப் (scribes) என்று ஒரு குடியினர் இஸ்ரவேலரிடம இருந்தமை போலும் இது. பழைய யூத புராணத்தையும் படித்து இதை அறிந்துகொள்ளலாம். பாரிசிகள், சாதுசிகள் என்றவர்களும் இருந்தனர். Dead Sea Scrolls என்ற நூலையும் படியுங்கள். C J Buckle SJ எழுதியவையும் படிக்கலாம்.
Sadusee என்ற சொல்லுக்கும் சதை என்ற தமிழ்ச்சொல்லுக்கும் ஏதும் நீங்கள் தொடர்பு அறிகிறீர்களா என்பதை எமக்குச் சொல்லுங்கள்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.