இன்று நாம் காப்பி என்ற சொல்லை ஆய்வு செய்யவிருக்கிறோம்.
காப்பி என்பது copy என்ற ஆங்கிலச் சொல்தான். ஒன்றிலிருந்து மிகுதியாகச் செய்யப்பட்டது என்ற கருத்தினால்தான் காப்பி என்ற சொல் தோன்றியது என்று ஐரோப்பிய அறிஞர்கள் கூறுகின்றனர். இதுவும் ஓரளவு பொருந்துவதாகவே தெரிந்தாலும் இதை இன்னொரு கோணத்தில் பார்த்துப் பொருள் அறிந்தால், தமிழிலிருந்து தோன்றியதாகவும் கூறமுடியும். இப்போது எப்படி என்று பார்ப்போம்.
மனிதன் பிறப்பது பெண்ணின் கால்களுக்கு இடையிலிருந்துதான் பிறக்கிறான். பாலூட்டு விலங்குகளும் தம் பின்னங்கால்களின் இடைவழியாகவே தங்கள் குட்டிகளை ஈனுகின்றன. வயிற்றிற் பிறந்த மகன் மகள் என்று சொல்வது வழக்கமானாலும் பிறப்பு உறுப்புகள் கால்களுக்கிடையிலேதாம் இருப்பனவாதலால் மனிதன் ஒரு கா-பி தான்.
மனிதன் என்பவன் அதனால் ஒரு கா-பி தான். வாக்கியத்தின் முதலெழுத்துக்களை மட்டும் வைத்துப் பேசி உணர்த்துவது தமிழகச் சிற்றூராருக்கு வழக்கமாகவே இருந்திருக்கிறது. சில இடக்கர்ச் சொற்களை எழுத்தெழுத்தாகப் பிய்த்துக் ககர முதலாகவோ பகர முதலாகவோ சொல்வது பழக்கம்.
தலையெழுத்துக்களை மட்டும் இணைத்துச் சொல் போல அமைப்பதும் உண்டு.
பிள்ளை குட்டிகள் என்போர் "கான்முளை" என்பது தமிழ் நெறியாகும். கால்வழி வெளிப்பட்டு வந்தவர்கள் தாம் குழந்தைகள்.
கால்வழி இறங்குவதுதான் கா-பி ஆகும். மனிதன் தன் முன்னோரின் காபி என்பதை அறிவியலும் ஒப்புக்கொள்கிறது. பிறக்கும் வழியால் மட்டுமன்று இன்னும் பல காரணங்களாலும் மனிதன் தன் முன்னோரைப் படிபலிப்பவன்தான்.
படிபலித்தல் என்றால் படியமைந்து பலவாதல். படி என்றால் ஒன்றன் படி அமைதல்.
பலித்தல் என்றால் பல் (பல) இறங்குதல். பல் இ > பலி> பலித்தல்.
உணர்ந்துகொள்ள இவை எளிய கருத்துக்களே.
சொற்களை அறிய நன்கு சிந்திக்க வேண்டும்.
ஒன்றன் அடித்தோன்றுவது அதன் போன்மையில் அமைவதுதான்.
ஓர் எழுத்தின்படி இன்னொன்று அமைவதும் "கால் பிறப்பு" ஆகிய கா-பி தான்.
காலுதல் என்ற வினைச்சொல்லும் பொருள்சிறந்ததே ஆகும். ஒன்றிலிருந்து இன்னொன்று ( வாயிலிருந்து எச்சில்போல) வெளிப்படுதல் என்பதையும் குறிக்கும், கையில் வெட்டுக்காயத்திலிருந்து "கான்ற" அரத்தம் அல்லது குருதி என்று வாக்கியத்தில் வரும், கால்> கான்றது, கால்கிறது, காலும் என்பவை செய்தது, செய்கின்றது, செய்யும் என்றபடி முக்காலத்துக்கும் வினைமுற்றுக்களாக அமைவனவாகும். ஆகவே கால் பி என்பது காப்பி என்றாவது உண்மையே என்றறிக. பு விகுதி பெற்று காற்பு > காற்பு இ > காற்பி> காப்பி என்று இலக்கியமுறையிலும் சரிவருகிறது.
வெள்ளைக்காரன் இந்தியாவிற்கு வந்து கற்றுக்கொண்டவை பல. முன்னர் இருந்த பிரித்தானிய மொழி அழிந்துவிட்டது. அதிலிருந்து சொற்களை எடுத்து ஏன் புதியன படைத்துக்கொள்ளவில்லை, ஏன் புதிய ஆங்கிலோ செக்சன் மொழி வந்தது என்பவெல்லாம் வரலாற்று ஆய்வுக்குரிய கேள்விகள்.
கட்டையராய்ச் சுருளை முடியும் உள்ளவர்களான வெள்ளை இனத்தவர் அழிக்கப்பட்டுவிட்டாலும் அவர்களுடைய பழஞ்சொற்களை ஆய்வின்மூலம் அறிந்துள்ளனர். என்ன செய்வது. அவர்கள் பாவம். உரோமப் பேரரசு இவர்களை அடக்கியதும் சரிதான். இவர்களுக்கும் வேண்டும். ஆனால் பின் இவர்கள் ஆசியாவிற்கு வந்து நம்மை ஆண்டனர். இது சோகமே.
காபி என்ற ஆங்கிலச் சொல் 1530க்குப் பின் வழக்குக்கு வந்ததென்று அறிகிறோம். அப்போது அவர்கள் இங்கிருந்து பலவற்றை அறிந்துகொண்டு விட்டனர் என்று தெரிகிறது.
நன்னூலைச் செர்மனிக்குக் கொண்டுபோய் மொழிபெயர்த்துக் கொண்ட னர்.
தமிழ் உலகச்செம்மொழி என்பது இவர்கள் சொல்வதனால் அன்றி, நமக்கும் இவர்கள் சொல்லாவிட்டாலும் அறிந்துகொள்வது என்று அறிக.
அவன் சொன்னான் இவன் சொன்னான் என்றில்லாமல் சொந்த ஆய்வினால் கண்டுபிடியுங்கள்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.