Pages

ஞாயிறு, 5 ஜனவரி, 2025

இரண்டு என்னும் பதம்.

 எமக்கு ஏறத்தாழ பன்னிரண்டு அகவை இருக்கும்போது, எம் தந்தையார் நீ தமிழும் படித்துக்கொள் என்றார்.  ஆனா ஆவன்னா முதலியவை முன்னரே அறிந்திருந்தாலும், "அறம் செய விரும்பு'' தெரிந்திருந்தாலும் இந்த மொழி வேண்டாம் என்று சொல்லிவிட்டோம்.  ஆனால் அவர் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார்,  இடைநிறுத்தங்களுடன் தாம். இதை வீட்டில் மட்டுமே பேசமுடியு மாதலால்  அவர்தம் வலியுறுத்தலால் இழுபாடு ஒன்றும் ஏற்படவில்லை. பின்னர் எவ்வாறு கவரப்பட்டேம் என்பதை பின் கூறுவோம்.

இன்று இரண்டு என்ற சொல்லை ஆய்வுசெய்து  இதன் சொல்லமை உட்பகவுகளை அறிந்துகொள்வோம்.  இதைப் பிறர் வேறு பகவுகளால் அமைத்து விளக்கியும் இருக்கின்ற படியால்,  இஃது பலவாறு விளக்கத்தக்க பல்பிறப்பி என்று அறிந்துகொள்க.

தமிழ் என்ற சொல்லை மட்டும் 100 வழிகளின் மிக்கு ஆய்ந்து வெளியிட்டுள்ளனர். காளமேகம் முதலிய பெரும்புலவர்கள் இத்தகு சொல்லமைப்புகளில் புகுந்து ஒரு சொல்லுக்குப் பல்வேறு அமைப்புகள் காட்டி விளையாடி மகிழ்விக்கின்றனர்.  திருத்தக்க தேவர் முதலிய மலைகள் திறமிகுத்துக் காட்டி மகிழ்வித்துள்ளனர்.  ஆகவே இத்தகு வசதிகள் தமிழிலே உள்ளமை திறம் என்று அறிந்துகொள்ளவேண்டும்.  வேறு மொழிகளிலும் இத்தகு பகுதிறம் உள்ளது.  ஆனால் இது தமிழில் மிகுதியாய் உள்ளது என்று தெரிகிறது, உங்களுக்கு நேரமிருந்தால் இதில் உழைத்து முடிவுகளை வெளியிடலாம்.

இப்போது இரண்டு என்னும் சொல்.   ஒன்று இருக்கும் போது இன்னொன்று அதே போன்றது ( நாய்க்குட்டி யாகவும் இருக்கலாம், பூனைக் குட்டியாகவுக் இருத்தல் கூடும்)   இருக்கும் ஒன்றை நாடி வந்தால்,   இரு+ அண்டு ஆகிறது.  இவ்வாறு சிந்தித்துத்தான் இரண்டு என்ற சொல் அமைந்தது.  பின்னாளில் அண்டுதல் என்ற கருத்து தொக்கு நின்று ( மறைவாகி)  இரு என்பது மட்டுமே இரண்டு என்ற எண்ணிக்கையை உணர்த்தியது.  இரண்டு என்பதிலிருந்து இரட்டு என்ற சொல்லும் உண்டானது..  இது இரு+ அடு என்பதுதான்.  அண்டு என்பதும் அடு என்பதும் இருவேறு ஒருபொருள் வடிவங்கள்.  அதாவது ஒப்புமை உடையன.  அடுத்துவரல் என்பதில் அடு வினை.  எரியும் நெருப்பு  சட்டியில் படுமாறு அடுத்துவைக்க உதவுதால்  அடுப்பு என்பதற்கு அப்பெயர் ஏற்பட்டது.

ஆனால் ஐரோப்பிய ஆய்வாளர்கள் இதை "பாத்ரூம்" என்பதனோடும் தொடர்புபடுத்தி "ஸ்டோவ்" என்ற சொல்லை விளக்கியுள்ளது  குளிர்சூழலில் வாழும் அவர்கள் இதை முன்வைத்ததன் காரணியை நாம் உணரமுடிகிறது.

தண்டு > ஸ்தண்டு > ஸ்தண்>  ஸ்தோ>  ஸ்தோவ் என்று வருதல் உண்மை. நெருப்பை அடுத்திருக்கவேண்டும்.  இல்லையே அடுப்பு வேலை செய்யாது. ஒன்று இன்னொன்றைத் தண்டவும் வேண்டுமே.

நெருப்பு என்ற சொல்கூட எரிதலை அடுத்து ( நெருங்கி)  இருப்பதை உணர்த்துகிறது.  பற்றுவதற்கு உராய்வு  வேண்டும். அகலாது அணுகாது தீக்காய்க என்றார் வள்ளுவனார். அவர் தெய்வப்புலவர் என்று பரிமேலகழாற் போற்றப்படுபவர்.

இரண்டு என்பதன் பொருள்கண்டீர்.

அறிக மகிழ்க


மெய்ப்பு பின்னர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.