Pages

சனி, 4 ஜனவரி, 2025

தாபதவேடத்தர் -- தாபதம்

 இதனை அறிந்துகொள்ளுமுகத்தான் முதலில்  வேடத்தர் என்பதை த்  தெரிந்துகொள்வது நலம்.

வெள் என்பது ஓர் அடிச்சொல்.  இது வெளிப்புறம் என்று பொருள்படுவதுடன்.  வெளியில் தெரிவது என்றும் அறிதரும் சொல்லாகும்.  வெள்> வெடு> வேடு> வேடம் என்பது காண்க.  வேடுகட்டுதல் என்றால் பானையின் வாயைத் துணிகட்டி மூடுதல். அல்லது  தழைகளால் அதற்கு முற்காலத்தில் மூடியிருக்கவும் கூடும்.  வெள்> வெய்> வேய்> வேய்தல், இனி,  வேய்> வேயம்> வேசம்> வேஷம் என்றுமாகும்.  யகர சகரப் போலி இங்கு கவனிக்க. இது பலமொழிகளிலும் வரும் திரிபுவகை.  ஆய்> ஆயை> ஆசை> ஆசை என்றும் இன்னும் சில்வாறும் திரியும்.  அசை> ஆசை என முதனிலை நீண்டும் தொழிற்பெயராகும்.  சுட்டடி விளக்கமாக,  அ -   அங்கிருப்பதை,  ஐ - ( மனத்துள்) மேல்கொண்டு வருதல் என்றும் பொருள் பொலியும்.  அ ஐ> ஆ ஐ >  ஆயை > ஆசை என்றுமாகும்.  மொழிச் சொற்கள் வளர்ச்சியில் இடைவளர்த்  தரவுகள் மறைந்து இல்லாமலாவது இயல்பு.

தாபத என்ற சொல்லுக்கு தருவதைப் பதுக்கி ( ஒதுக்கிவைத்து) உண்போர் என்றும் பொருள்வரும்.  தவஞ்செய்தலையும் குறிக்கும்.  இது பல்பொருளொரு சொல்  ஆகும்,  தா+ பது >  ;   தா+ பதி.   தருவதை மனத்துள் பதிந்து நன்றிசொல்வோர் என்றும் பொருள்கூறலாம்.  தமிழால் பொருள்சொல்ல முடியாத மொழிகள் சிலவே.   தவத்தால் பதிவுற்ற எனலும் சிறப்பு.

தப்புதல் என்பது  தபுதல் என்று இடைக்குறையும்.  உலகவாழ்க்கை  யிலிருந்து தப்பித்து வாழ்வோர் எனினுமாகும்.  தபு + அம்> தபம்,  தபம்> தவம் எனினும் ஆகும்.  மக்களிடை வாழ்தல் மாசுடைத்து என்பதால் தபுதலுற்று தப ஞானியாதல் எனினுமாகும்.

தாபதம் -  முனிவர்வாழிடம் என்றும் ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.