will edit later. Written for my close friends. Will be moved later to another location.
சில காரணங்களுக்காக, இந்த இடுகையில் இந்த முன்னாள் விலைமகளின் பெயர் வெளியிடப் படமாட்டாது. இவளின் மீட்சிக்காகப் பாடுபட்டது என் காலஞ்சென்ற மனைவிதான். என் சேமிப்பும் இதிற் பெருவாரியாகச் செலவு ஆகிவிட்டது. இதைப் பற்றிச் சில வேளைகளில் யாம் எண்ணிப்பார்ப்பதுண்டு. காரணம் எமக்குப் பயனில்லாத முயற்சி இதுவாகிவிட்டதுதான். இவள்பெயரை இங்கு வீ=லை என்று மட்டும் குறிப்பிடுவோம்.
விலை (விலை மாது) என்பது வீலை என்று மாற்றி இங்குப் பெயராகும்.
பன்னிரண்டு அகவையிலே வயதுக்கு வந்தவுடன் இவள் ஒருவனுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டாள். இரண்டு பிள்ளைகள் பெற்று அந்தப் பிள்ளைகளுக்கு ஏழு எட்டு வயதானவுடன் தான் மீண்டும் இவளின் அன்றைய இடம் எங்களுக்குத் தெரியவந்தது. இந்த மனிதன் வேற்று மதத்தவனாக இருந்தமையால் இவளை இவள் குடும்பத்தினர் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
மதம் பார்க்காமல் இவளுக்கு மறுவாழ்வுக்கு இடமளிக்க வேண்டும் என்று யாம்தான் முடிவு செய்தோம். இவள் புருடனுக்கு நிரந்தர வேலை எதுவும் கிடைக்கவில்லை. அவ்வப்போது ஏதாவது ஊதியம் கிடைக்கும். மற்றபடி எமது பராமரிப்பை இவள் குடும்பம் ஒரு பகுதியாக நம்பி இருந்தது என்பதுதான் உண்மை.
இவள் கூற்றின்படி மத வேறுபாட்டு நிலைமை மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தை என் மனைவிதான் முன்னெடுத்தார் என்று இவள் சொல்லிக்கொண்டிருந்தாள். அதனால் இந்த வேற்றுமதப் புருடனை விட்டு இவள் இன்னொரு இந்து மதத்தவனைச் சேர்த்துக்கொண்டாள். வேற்றுமத முதல் புருடன் கிளர்ச்சி செய்த காரணத்தால் யாமே தலையிட்டு அவனை வெளியேறும்படி கேட்டுக்கொண்டோம். அவனும் மலேசியாவில் பூச்சோங்க் பகுதியில் கடைவைத்துப் பிழைப்பானாகினான்.
இந்தக் குடும்பத்துக்கு யாமளித்துவந்த உதவி போதவில்லை என்பது பின்னர்தான் தெரிந்தது. இந்த இரண்டாமவன் குடிப்பவன். ஆனால் பளுவண்டி ( லாரி ) ஓட்டினான், அதிலும் வருமானம் கிடைத்தது.
ஆனால் இவள் வீட்டை விட்டு இரண்டாம் முறை ஓடிய காலத்தில் கொஞ்சக் காலம் விலைமாதாக வேலை பார்த்துப் புருடனைக் காப்பாற்றினாளாம். அப்போது ஏற்பட்ட காவல்துறை நடவடிக்கையில் இவள் நீதி மன்றத்தில் வழக்குக்கு உட்பட்டுத் தண்டனை பெற்று வெளியில் வந்தவள். இவளும் இவளுடைய இரண்டாவது புருடனும் சில திருட்டு வழக்குகளில் மாட்டிச் சிறைப்பட்டுச் சின்னாபின்னப் பட்டனர். என் மனைவி இதில் பேருதவியாக இருந்து இவர்களின் துன்பங்களிலிருந்து இவளை மீட்டெடுத்தார்.
இவர்களின் தொல்லை நீண்ட நாள் தொடர்ந்த காரணத்தால் இவளை வீட்டிற்கு வருவதினின்றும் குறைக்கவேண்டும் அல்லது தடுக்கவேண்டும் என்ற முன்மொழிதலை யாம் முன்வைத்தோம். அது இவளுக்கும் இவள் இரண்டாவது புருடனுக்கும் பிடிக்கவில்லை.
அதனால் இதுவரை பெற்ற உதவிகளையும் சாப்பிட்ட உணவையும் மறந்துவிட்டு எம்மீது பல்வேறு குறைகளையும் கூறிவருகிறாள் இந்த முன்னள் விலைமாது.
பிராமணனாகப் பிறந்து திரு வி. எஸ் பிள்ளை என்ற தமிழ் வித்துவானால் வளர்க்கப்பட்ட என்னை இவள் குறைத்துக்காட்டி விடலாம் என்று நினைக்கிறாள். இவளைப் பற்றிய வண்டவாளங்கள் அனைத்தும் அறிந்து காவல்துறை அதிகாரியாய் இருந்த என்னை இவள் வென்றுவிடுதல் அத்துணை எளிதன்று.
இவளை அண்மையில் நடந்த குடும்ப நிகழ்ச்சிகளிலிருந்து ஒதுக்கி வைத்துள்ளோம். இவள் சொல்வதை யார் கேட்பவர்களானாலும் அதைப்பற்றி யாம் கவலை கொள்ளவில்லை.
இது மீண்டும் செப்பனிட்டு வெளியிடப்படும். இவளின் உண்மைப் பெயர் வெளியிடப் பட மாட்டாது.
தொடர்ந்து எழுதுவோம். இது என்ன சண்டை என்று கேட்பவர்கள் தாமே படித்து அறிந்துகொள்ளும்படியாக இது வரையப்படுகிறது. ஏதும் சொல்வதற்கில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.