அம்மைதுர்க்கா கருணையினால் அகிலம் தன்னில்
அருள்பெற்றோம் பொருள்பெற்றோம் அனைத்தும் பெற்றோம்
உண்மையினால் அம்மையினை உயர்த்திப் போற்றின்
உலகிலொன்றை இயலாதென் றகலல் இல்லை.
எம்மவர்க்கோ பிறருக்கோ எதையும் சொல்லா
திருந்தாலும் மனவணக்கம் ஒருவாற் றாலே
நம்மைவந்து காக்கின்ற அருண்மெய்த் துர்க்கை
நாம்வேண்டும் போதெல்லாம் நண்ணும் தேவே.
கருணை - இரக்கம். இரக்கம் என்பதே பின் ரக்ஷ என்றும் திரிந்தது. இப்பாடல் மனவணக்கத்தின் பாங்கினை வலியுறுத்துகிறது. இதைப் பிறருக்கு வெளிப்படுத்த வேண்டியதில்லை.
ஒருவாற்றாலே - ஒரு வழியாலே. அருள்பெறு மெய்யினால் முன் தோன்றுவதால் அருண்மெய் ஆயிற்று. நண்ணுமின்கள் நல்லறமே என்ற சிலம்புப் பயன்பாட்டில் பொருந்துக என்ற பொருளில் இச்சொல் வந்தமை போல் காண்க.
தேவு - கடவுள். இது தேவன், தேவி என்பவற்றில் அடிச்சொல்
அகிலம் என்பது ஓர் அழகிய சொல். சுட்டடிச் சொற்களின் வழியில் சென்று இதன் பொருளை உணரவேண்டும்.. அ அங்கு; கு - சேர்விடத்து; இல் = நமக்கு வீடாக ; அம் - அமைந்திருப்பது என்பதை சேர்விடத்து அங்கு என்று மாற்றிக் கொள்க. நீ அகிலத்தை விட்டு அப்பால் போய்விட முடியாது; எப்படிப் பார்த்தாலும் இறைவன் அமைத்த அவ்விடத்துக்குள் தான் இருப்பாய்..அகிலம் என்பது அழகிய தமிழ்ச்சொல்.
நீ இருக்குமிடம் நீங்கிய எவ்விடமும் இருக்குமிடத்துடன் சேர்ந்திருப்பதே என்பதை கு என்னும் இணைப்புச்சொல் விளக்கும். மேற்கூறியவற்றுடன் இப்பொருளும் இணைய, அ-கு என்பன உயரிய பொருண்மை தந்தன காண்க. நீ இருக்குமிடமும் ஒன்றானதே அகிலம். இல் என்ற சொல் அது தமிழ்ப்புனைவு என்பதை உறுதிப்படுத்துகிறது.
துர்க்கையம்மன் பல் இனத்தவராலும் இந்தியாவில் வணங்கப்பெறும் தெய்வம். துர்க்கை என்ற சொல்லுக்கு அவ்வம்மொழி அறிஞர் பொருள் கூறுவர். ஒரு குழந்தையைப் பாராட்டுவதுபோல் அன்பு காட்டுவதும் பொருள்கூட்டுவதும் விதம் பலவாம். ஆனால் தமிழில் உள்ள சிறப்புப்பொருள், எத்தடையையும் துருவிச்சென்று காவல்தரும் அம்மை என்பதாம். இதை நாம் ஏற்றுப் போற்றுவோம்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
மெய்ப்பு: 16122024 2112
Pl do not enter compose or edit mode as you might make unwanted changes unintendedly by your mouse movement. Changes are at times autosaved .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.