மக்களைவிட் டகன்றார்மா மன்னரவர்
மலேசியச்சீர் ஆனந்தக் கிருஷ்ணனார்
தக்கபல நாட்டினுக்கே இயற்றினவர்
தனிவணிக நன்முயற்றி வென்றவரே
தமரயலார் யார்பலரும் வாழ்கவென்று
தரணியிலே ஒப்புரவைப் போற்றியவர்
நமைவிட்டே நீங்கியமை பெருந்துயரே
நாமவர்க்கே நம்பணிகை கூப்புகிறோம்
தக்கபல - தகுதியுடைய பலவற்றை.
இயற்றினவர் - உண்டாக்கினவர்.
முயற்றி - முயற்சி.
வென்றவர் - வெற்றிகொண்டவர்
தமரயலார் - தமர் ஆயினும் பிறர் ஆயினும்
நம் பணி கை - நாம் வணங்கும் கையால்.
பெரியோரை அவர்தம் உயர்வினை உன்னி
எப்போதும் பணியும் "உணர்ந்த" கைகள்.
முயல்தி > முயற்றி. ( பெயர்ச்சொல் ஆனது)
முயல் சி > முயற்சி ( இதுவும் அங்கனமே ஆனது)
பொருள் ஒன்று, விகுதிகள் வேறாயின.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.