Pages

ஞாயிறு, 8 டிசம்பர், 2024

திபேத்து என்பதன் தமிழ்த்தொடர்பு. திபேத்து - தமிழ்மூலம்

 தந்திரம் என்ற தமிழ்ச் சொல்  குறுகி,  தந்து என்றும் ஆகும்.   இப்படி அமையும் சொற்களை கடைக்குறை என்பார்கள். 

தந்திரம் என்ற சொல்லை இங்கு விளக்கியுள்ளோம்  என்பதே எம்  நினைவிலிருப்பது,  இது இலக்கணப்படி கடைக்குறையாகித் தந்து என்றும் வருதலுண்டு.  தந்திரம் என்ற சொல்லுக்கு இடனோக்கிப் பொருள்கொள்ளவேண்டும்.  இதிலிருந்து தந்திரீகம் என்ற சொல்லும் வந்துள்ளது. தந்திரம் என்பது  "தன் திறம்"  என்ற இருசொற்களினின்று தோன்றியுள்ள சொல் ஆகும். ஒரு மனிதன் இந்தியாவில் பிறந்தவனாகில் அவனை இந்தியன் என்று சொல்கிறோம்.  அவனே அமெரிக்காவிற்குச் சென்றுவிட்டால்,  அங்கு குடியுரிமை பெற்றபின்,  அமெரிக்கன் ஆகிவிடுகிறான். இந்தக் கருத்து சட்டப்படி சரிதான் என்றாலும் இவனை அமெரிக்காவில் அடுத்திருப்பவன்  "இந்தியன்" என்றுதான் சொல்கிறான்.  அவனே சிங்கப்பூரில் வேலைகிடைத்து, சிங்கப்பூரில் குடிவாழ்நனுமாகி குடும்பக்காரனாகிவிட்டால்  சிங்கப்பூரன்  ஆகிவிடுகிறான்.  மனிதன் இடமாற்றம் கொள்வதுபோலவே சொற்களும் இடமாறுகின்றன என்றாலும், அவனை இன்னும் இந்தியன் என்றே அடுத்திருப்போர் அழைக்கின்றனர்.  இடத்தால் மனிதன் அறியப் படுவதென்பது மரபு.  இவனின் முன்னோர் இருபதினாயிரம் ஆண்டுகட்கு முன் மரத்தில் பரண்வீடு அமைத்து அதில் குடியிருந்தனர்.  நாம் பார்க்கவில்லை என்றாலும் எல்லா மனிதர்களும் எங்கிருந்தோ வந்து சேர்ந்துவிட்டனர். மாந்தவளர்ச்சி ஆராச்சி நூலின்படி  இவன் மரவாழ்நனாக இருந்த காலத்தில் இவன் யார் என்றால் "மரவன்" என்று குறிப்புற்றிருக்கலாம். சோழ் அரசாட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் இவன் சோழச் சேனையில் பணியாற்றினான்.  அப்போது இவன் "மறவன்"   ஆகிவிட்டான். அப்புறம் பல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கக் கூடும்.  மறவன் என்ற அடையாளம் இன்னும் தொடர்ந்ததா, அன்றி மாறிவிட்டாதா என்பவெல்லாம் ஆய்ந்தறிய வேண்டியவை. இப்போது அவன் மரத்திற் குடியிருக்கவில்லை யாதலின், மரத்திற்கும் அவனுக்கும் பல்லாண்டுகளின் முன் நிலவிய அடைவினை மக்கள் மறந்திருப்பர். ஆகவே மரவன் மறவன் ஆகிவிடுதற்கு கருத்துத்தடை மனத்தில் எழுவதில்லை. அழகிய மலாய்ப் பெண்ணைக் கண்டு மயங்கி, குலம் மதம் எல்லாம் மாறி இவன் பின்னோர் மலாய்க்காரர்கள் ஆகிவிடுவர்.  இந்தியச் சொற்கள் இந்தோனீசிய மொழியில் இடம்பெற்றிருந்தமையைச் சுட்டிக்காடி. இருநாடுகட்கும் இடையில் இருந்த முன்னைத் தொடர்புகளை முன்னாள் அதிபர் முனைவர் ஹபீபி ( 1936 -2019) விரிவாக்கவேண்டும் என்று இந்தியாவிடம் கூறினார். பல சமஸ்கிருத-- தமிழ்ச்சொற்களை அவர் அறிந்திருந்தார். மனிதனைப் போலவே மொழிகளும் பேசுவோர் பலரிடம் தாவி வேறு பலமொழிகளுக்குள் சென்று தங்கிவிடுகின்றன.  இந்தோனீசிய மொழியில் இடன் கொண்ட தமிழ்ச் சொற்கள் பற்றிய பல நூல்களும் உள்ளன.

கடல் கடந்த இந்தோவில் இவ்வாறு என்றால் திபேத்தில் தமிழ்ச்சொற்கள் இருக்கவேண்டுமே. எல்லாம் ஆய்வு செய்தால் அறிய இயலும்.  இன்று நாம் தீபேத் என்ற சொல்லை மட்டும் ஆய்வுப்படுத்துவோம்.

நம் பூசையறையில் நாம் தீபம் ஏற்றுவதைப்போல உடலினுள்ளும்  ஒரு தீயை அல்லது தீபத்தை மூட்டலாம் என்று தந்திரீக முறையில் கூறுவர். இவ்வாறு உடல்தீப மேற்றும் தியான முறை தீபேத்தில் போதிக்கப்பட்டு, பயிற்சிகள் நடைபெற்றன. ஆகவே தீபேத்தைப் பற்றிப் பேசுகையில் அது உடல் தீபத்தை ஏற்றும் நாடு என்றே தமிழர்கள் பாராட்டினர். இதிலிருந்து தீபம் + ஏத்து  என்ற குறிப்பினால்,  தீப+ ஏத்து > தீபேத்து > தீபேத்> திபேத் என்று அந்நாட்டுக்குப் பெயர் ஏற்பட்டு வழக்குக்கு வந்தது. இது யாது என்றால் உடலின் உள்ளிலும் தீபமேற்றி உள்ளொளி பெருக்கவேண்டும்  என்பதே. இது ஆத்மீக உள்ளொளி.

இமயத்துக்குச் செலவு மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர்கள் தமிழர்.  மன்னர்களும் படையெடுத்துச் சென்று இமயம் தொடுவதைப் பெருமையாகவே நினைத்தனர்.  கைலாசம் என்ற சொல்   கை+ இல் + ஆய(ம்) என்று வந்து,  இறைவனுக்கு மலைப் பக்கத்தில் உள்ள இல்லம் என்றே பொருள்பட்டது. இந்தியாவுடன் மிக்க நெருக்கமான தொடர்பு உள்ள நாடாகவே திபேத் இருந்தது.

ஏற்று என்ற சொல்லும், பேச்சில் ஏத்து என்று வரும். ஏத்து என்று இன்னொரு சொல்லும் உள்ளது. அதற்குத் துதித்தல் என்று பொருள். ஆத்திசூடியில் "ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே" என்று வரும்.  அந்த "ஏத்து" வேறு.

ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு உடல்கள் உள்ளன. ஒன்று இந்தத் தோன்றுடல்,  .சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்பவை நம் தோன்றுடலால்  அறியப்படுவன.    அகவுடல் ஒன்றும் உளது.. இதனை subtle body என்றும் குறிப்பர். இந்த அகவுடற்கே உள்ளொளி இருக்கின்றது.  ஆனால் அது இலங்குவதற்கு அதற்குத் தீபமேற்றவேண்டும்  என்பதாம்..   

அகவுடல் வெளிக்காட்சி இல்லாமல் உள்ளடங்கி இருக்கும் உடல். பலரால் அறியப்படாமல் உள்ளிருப்பது ஆகும். இவ்வுடலுள் ஆத்துமா இருக்கிறது.  ஆத்துமா என்றால் அகத்துமா -  அகத்தில் அமைந்த பெரியது. உள்ளொடுங்கி அமைகிறது.

இவை திபேத்திய கருத்துக்களாம்.  திபேத் என்ற பெயரமைவுக்கு விளக்கம்.

திபேத்துக்கு மற்ற பெயர்களும் உள்ளன. வுசிகோ, வூழ்சிசாங்க்,  துபோத்தே, தங்க்குதே என்பன அவை.  இப்போது இவை வழங்கவில்லை. போட் என்பதும் இன்னொன்று. சீனப்பெயர் தூபோ என்பது தீபோ ( தீபம்) - இவை ஆய்வுக்குரியவை.  தீபேத்திய கட்டடக்கலை சீன இந்தியக் கட்டடக்கலைகளின் சாயலை உள்ளடக்கியதாக எண்ணப்படுகிறது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

மெய்ப்பு: 09092024 2128 நடந்தது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.