சொந்த தேசத்திலே இருப்பவன் சுதேசி எனப்படுகிறான். இந்தச் சொல் தமிழ் மூலங்களிலிருந்து வருவது என்றாலும் அயல்போல் தோன்றுகின்றது. இஃது எப்படி அமைந்த சொல் என்று பார்ப்போம்.
பழந்தமிழில் தேஎம் என்றிருந்த சொல் திரிந்து "தேயம்" என்று எழுதப்பட்டது. தேஎம் என்பது அளபெழுந்த வடிவம். இதன் மூலவடிவம் தேம் என்றிருந்திருக்க வேண்டும். ஆயின் தேம் என்பது பிற பொருண்மைகளும் உடையதாய் இருந்தமையால், அளபெழுந்த தேஎம் என்பதே பெரும்பாலும் தேயம் (தேசம்) குறிக்க வழங்கப்பட்ட தென்று தெரிகிறது. தேம் இனிமை என்பதும் ஒரு பொருள்.
இவற்றிலிருந்து தேயம் என்பது தமிழிலிருந்து வந்த சொல் என்பது தெளிவாகிறது.
அப்பனுக்கு இருந்த பெரிய நிலப்பரப்புக் கொண்ட தேசம், தேய்வதற்கு, அரசனின் பிள்ளைகள் பங்குவைத்துக் கொள்வதும் ஒரு காரணம். இரண்டாம் மூன்றாம் இளவரசர்களுக்கு பகுதிகள் ஒதுக்கப்பட்டு, வருமானத்திலும் பங்குகள் அளிக்கவேண்டி இருந்தது. அல்லது புதிய பகுதிகளை வென்று, அவர்களுக்கு அளிக்கவேண்டி இருந்தது.
காலம் செல்லச்செல்ல, தேய்வதுதான் தேசம்; எனவே தேய் என்ற அடிச்சொல்லே தேசம் என்ற சொல்லுக்கு ஆக்கம் தந்தது. இச்சொல் பிற்காலத்தில் குறுகிய பயன்பாடு உடையதாயிற்று என்று தெரிகிறது. தேய்வதுதான்: தேய்வது விரும்பப் படவில்லை.
அது சமகிருதத்தில் நல்ல வழக்குப் பெற்றது. தேய்தற் கருத்து அங்கு எழவில்லை.
தேசத்தை உடையவன் அல்லது சேர்ந்தவன் தேசி. தேசம்+ இ > தேசி. அம் இறுதி வீழ்ந்தது.
சுதேசி என்றவன் சொந்த நாட்டினன். சொந்த என்ற சொல் சு என்று திரிந்தது. சொந்தம் > சொ > சு. இது தேசி என்பதுடன் இணைப்புற்று சுதேசி என்றானது.
சமஸ்கிருதச் சொல்லாக இச்சொல் நல்வாழ்வு மேற்கொண்டது.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.