அரசு என்ற சொல்லின் ஆய்வு இப்போது நிகழ்த்துவோம்.
அரசு என்பது மக்கள் எங்கிருக்கிறார்களோ அங்கு அல்லது அருகிலிருந்து பாதுகாப்பு வழங்கும் ஒரு தலையுறுப்பாகவே அறியப்பட்டது ஆகும். இந்தப் பொருளை அரசு என்ற சொல்லினின்றே எடுத்தறிவோம். பண்டு மக்கள் கூட்டமாக ஓரிடத்தில் வாழத் தொடங்கிய காலத்து, அவர்களுக்குத் தலைமை தாங்கிய ஒருவரோ அல்லது குழுவாரோ மக்களிருந்த இடத்திலே தான் இருந்தனர். இந்த வரலாற்றை அரசு என்ற சொல்லே தெரிவிக்கிறது. அதாவது காவல் தருவோர் காவல் பெறுவோரின் அருகில் இருந்தனர்.
அருகில் என்றால் இடம் அருகில் என்று மட்டும் பொருளன்று, "ஆட்சி அடைவுகள் சென்று, பெறும் மக்களைக் கட்டுகின்ற, இறுக்கம் செய்கின்ற அளவில்" என்றும் பொருளாகும். இத்தகு திறன், ஆட்சிக்குழுவின் தன்மைக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப வேறுபடுவது ஆகும். இடத் தொலைவு அல்லது அஃது அன்மை, மாற்றமில்லாது இருக்கும் ஓர் உறுப்பு ஆகும். There are two factors we have enumerated, one constant and the other variable according to prevailing circumstances.
இதை விளக்கும்போது: "இயன்ற மருங்கின் இனைத்து என அறியும் வரம்பு" என்பார் தொல்காப்பியர். உரியியற்குக் கூறினாரெனினும் சொல்லியலுக்கும் ஏற்றதிதுவாகும்.
இப்போது அரசு என்ற சொல்லைக் கவனிப்போம்.
அரு + அ + சு, இவற்றைச் சந்திப்படுத்த, அரசு என்ற சொல் வந்துவிடுகிறது.
அரு என்பது ஒருபால் தொலைவின்மையைக் குறிக்கிறது. அரு > அருகு(தல்) : பக்கத்தில். அரு என்ற ;பகவு, அதிகாரம் தொலைவு என்ற இரண்டினுக்கும் பொதுவானது ஆகும், அர் என்பது அருகு, அரட்டு என்ற இரண்டினுக்கும் பொதுவான பகவு ஆகும்..
அ என்பது சுட்டுச்சொல். இங்கிருந்து என்பது சொல்லாமலே விளங்குவது. அ என்பது இடத்தொலைவும் கடந்து ஓரிடத்து முடிவதைக் காட்டுகிறது. ஆட்சி அதிகாரம் என்பதைக் கருத்தில் கொண்டால் அதன்பொருள், எங்கு முடிகிறதோ அவ்விடம் குறிப்பது தான். அ என்னும் இது சுட்டுச்சொல், மறக்காதீர்.
சு என்பது அருமையான ஒரு விகுதி. ஏனென்றால் ஒரு விகுதியாக இருத்தல் மட்டுமின்றி அது தொலைவுச்சுருக்கத்தையும் குறிப்பால் உணர்த்துகிறது.
சு - சுருக்கம்.
உகரத்தில் முடியும் சு விகுதி சேர்க்கும் சிறப்பு , எல்லை 'முடிவிடமானது,' 'முன்னுள்ளது' என்பதையும் குறிப்பால் உணர்த்தவல்லது.
ஒரு சொல்லுக்கு ஒரு விகுதி இணைப்பதென்றால் இப்படியன்றோ அமைக்கவேண்டும். தமிழை ஆழ்ந்து கற்கவேண்டும். பக்கத்துக் குப்பைக் கருத்துக்களைக் கொண்டுவந்து பொருண்மை அற்றவற்றை இணைத்துக் கூறலாகாது. இதையறிய வரலாறு செய்யும் உதவி --- இல்லை அல்லது சிறிதாகவே இருக்கலாம்.
ஆகவே ஆள்வோர் இடம், காவலுறுவோர் இடம், ஆட்சி எல்லை எல்லாம் அரசு என்ற சொல்லுக்குள் அடங்கிவிட்டது. அரசு நடைபெறுவித்தல் என்பதற்கு இவையெல்லாம் கூறுபாடுகள். மீண்டும் படித்துத் தெரிந்துகொள்ளவும்.
The ruler, the ruled, the space or area under that rule, the boundary all are indicated in the word itself.
நேரம் கிட்டுங்கால், அங்கம் என்ற சொல்லையும் விளக்குவோம். இணைந்திருங்கள்.
அரசு என்ற சொல் உலக முழுமைக்கும் சுற்றிவந்து எந்தெந்த வடிவம் கொண்டாலும், ராஜ், ராஜா, ராவ், ராவுட் என்று எப்படித் திரிந்தாலும் இந்தப் பொருண்மை திரிபுச்சொற்களில் கிட்டாது என்று உணர்ந்துகொள்க.
மொழிபொருட் காரணம் விழிப்பத் தோன்றா என்றார் ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பிய முனி. தொல்காப்பியம், உரியியல், 96
இயன்ற மருங்கின் இனைத்து என அறியும்
வரம்பு தமக்கு இன்மையின் வழி நனி கடைப்பிடித்து
ஓம்படை ஆணையின் கிளந்தவற்று இயலான்
பாங்குற உணர்தல் என்மனார் புலவர். தொல் உரி 98
இவ்வளவும் தமிழால் உணர்ந்துகொள்க.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.