இன்று சன்(sun) என்ற ஆங்கிலச் சொல்லுக்கும் தமிழ்மொழிக்கும் என்ன தொடர்பு என்பதை மெல்லவே ஆய்வு செய்வோம்.
எல்லா மனித மொழிகளும் எல்லா மனிதர்களுக்கும் சொந்தமானவை. இவற்றை எல்லாம் உண்டாக்கிக்கொண்ட மனிதற்கும் இன்று இவற்றில் ஏதாவது ஒன்றிரண்டைப் பயன்படுத்தி நாடுகளிடை அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொணரப் பேசும் பல்வேறு மானிடர்களுக்கும் மொழிகள் கருவிகளாகிவிட்டன. இதற்கு நாம் மிக்க நன்றியை மொழிகளை ஆதியில் புனைந்திட்ட யாவருக்கும் சொல்லி அமைவோமாக.
அனல் என்ற சொல்லை நாம் அடிக்கடி பயன்படுத்துவதில்லை. நாம் பயன்படுத்தும் நீர் கொதிப்பு மற்றும் ஆக்கும் கருவிகள் அனலைக் கக்கவில்லை. தங்கள் இயக்கத்தினால் வேலையைக் குறித்தபடி முடிக்கவேண்டிய சூட்டினையே அவை வெளிப்படுத்துகின்றன. சூடு அதிகமானல் எல்லை மீறிவிடாமல் இயங்க மட்டுறுக்கைகளும் அவற்றில் உட்பொருத்தப் பட்டுள்ளன. இப்படியே காலம் போகுமானால் அனல் என்ற சொல்லை மறந்துவிடுவோம். அனல் என்ற சொல்லுடன் கனல் என்ற சொல்லும் நம் கருத்தில் உள்ளது, அன் > அனல். அன் என்பதே அடிச்சொல். இதுவும் தமிழில் உள்ள மூலச்சொல்லே ஆகும். அனல் என்பது கனல் என்று திரிந்து அதே பொருளைத் தருகிறது,
ரூபி என்ற ஆங்கிலச்சொல்லுக்குக் கெம்புக்கல், கனல்நிறக்கல் என்பர். தமிழில் மாணிக்கம் என்ற சொல் ரூபியைக் குறிப்பதாகும்
அணுகினால் அறியப் படுவதாகுவதாகிய, தீ எரிந்து கொண்டிருக்கும் இடத்தில் உள்ள வெப்பம் அனல். அணுகு< அண்> அன்> அனல். இது தீயையும் குறிக்கவல்ல சொல். அன் > சன் . இது திரிசொல். அனல் என்ற சொல்லின் ஆக்கக் கருத்து அணுகுதல் ஆகும்.
சன் என்ற சொல்லை சுவென் என்று இந்தோ ஐரோப்பிய மூல அகரவரிசையில் பதிவு செய்துள்ளனர், ஆனால் சன், சன்னி என்பதன் திரிபுகள் ஐரோப்பியமொழிகளில்காணப்படுபவைதாம்.
அன் ( அனல் ) என்ற மூலவடி, திரிபு விதிகளின் படி சன் என்பதை நேரடியாகவே பிறப்பிக்கும். மற்ற ஐரோப்பிய மொழிகட்குச் செல்லவேண்டியதில்லை. ஆகவே இந்தத் திரிபு ஆங்கிலத்திலிருந்து ஐரோப்பிய மொழிகட்குப் பரவிற்றா அல்லது ஐரோப்பிய மொழிகளிலெல்லாம் வழங்கித் தேய்வுற்று ஆங்கிலத்துக்கு வந்து சேர்ந்ததா என்பதை அவர்களிடமே விட்டுவிடலாம். ஏனென்றால் ஆங்கிலேயர்களே இந்தியாவில் நீண்ட நெடுநாள் இருந்து தொடர்பில் இருந்துள்ளனர். சாவல் என்ற இன்னொரு இ.ஐ மூலமானது சன்+வல் அல்லது அன்-வல் ( அனல் வலிமை) என்பதில் சற்றுத் திரிந்து பதிவுற்றுள்ளது என்றும் கருதலாம்.
இவ்வடிகள் நோர்ஸ், செக்சன் மற்றும் ஜெர்மானிக் முதலியவற்றில் உள்ளன. இலத்தீனத்தில் காணமுடியவில்லை. ஆகவே இலத்தீனத்தில் இருந்தாலே காலம் நீட்சியானதென்பதை( பழமையை) க் காட்டும்.
அனலிலிருந்து அன்> சன் என்பதை அறிந்து மகிழ்வோமாக.
அனலின் காரணமாகச் சன் என்ற சொல் தோற்றுவாய் பெறுமாயின், சூடு காரணமாகச் சூடியன்> சூரியன் என்ற சொல் தோன்றியிருத்தலும் கண்கூடு ஆகிவிடும். மடி> மரி என்பது திரிபுவாய்பாடு ஆதலின். அடு > அரு என்பதும் தெளிவின் மேற்றே யாவது.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
>
==========================
சமாதானம் --- சமம் ஆகும் தானம் > சம ஆ(கும்) தான் அம் > சமாதானம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.