ஆகன்று பிரிந்தது போல்--- பலர்
அழகிய வீடுகள் பார்க் காமலே
போகாது வீழ்ந்தனரே --- அதனால்
புகுந்திட்ட துன்பங்கள் பற்பலவே
எலிகளும் பூச்சிகளும் --- இன்னும்
இருந்திட்ட பாம்புபூ ரான் களுமே
மலிகரை யான் களொடு --- வந்து
மண்டின நுழைந்ததும் நோய்கண்டதே.
முன்வாசல் கதவிரும்பு ---- துரு
மூண்டுதுண் டாகின மீட்பிலையே
இன்னவை மீட்டெடுக்க --- மக்கள்
இங்குசெய் பழுதுபார்ப் பின்படம்காண்.
அரும்பொருள்:
ஆ கன்று - பசுவும் கன்றும்.
மலி - மலிந்துவிட்ட அதிகமான.
கரையான் - கறையான், சிதல். மரப்பொருள்களை அரிக்கும் பூச்சி.
மண்டின - நிறைந்தன
மூண்டு - உண்டாகி
மீட்பு --- பழைய நிலை வருதல்.
இலையே - இல்லையே
பழுதுபார்ப்பு - மீளாக்கம். ( ரிப்பேர்)
இந்த கோவிட் மூன்றாண்டுகளில் ஏற்பட்ட வீழ்ச்சி இப்போதுதான் ஆங்காங்கு
சரிப்பட்டு வருகிறது. பாவம் இந்த மக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.