ஆங்காங் கடற்கரை ஓரம் ---- அங்கே
அமர்ந்து நலம்பல பேசிடலாம்
ஓங்கும் இயற்கையின் சூழல் ----மலை
உச்சிக் குளிர்ச்சியைப் பழித்திடுமே
சில்லெனும் மெல்லிய தென்றல் --- இது
சீன மாநிலத் தேன் தடவல்
வல்லென வந்தவை எல்லாம் ---- இங்கு
வழிந்து தொலைந்திட வான்மகிழும்.
உடுக்கள் சிமிட்டிடும் கண்கள் ---- கடற்
குரிய அன்பகம் உய்த்தனவே,
படுக்கை தலையணை வைத்து --- இராப்
பண்ணொடு தூங்கிடப் பயன்தருமோ?
படத்தில் : அம்மாவும் மகளும்.சூழல் - சுற்றுச்சார்பு.
வல்லென - சற்றுக் கடினமாக
அன்பகம் -- பாச உள்ளம்
இராப் பண் - இரவு நேரப் பாடல்
தூற்றல், கடுகி வீசும் காற்று முதலியன இல்லாமையினால் வானும் மகிழ்ந்தது என்பதறிக.
ஹாங்காங்க் என்பதை ஆங்காங்கு என்றே மாற்றுருவாக்கி யுள்ளோம். இது ஆங்கு+ ஆங்கு என்று வந்து பிற இடங்களையும் குறிக்கும் இரட்டுறலாகவும் வரும்.
இறுதிவினா: கொஞ்சம் தூங்கிக்கொள்ள இடம் கிடைக்குமோ என்ற எண்ணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.