பிறகிட்ட - இதை புரக்கட்டு, பெரக்கட்டு என்று நாவு பலவாறு பலுக்கும்.
பிருட்ட பாகம். இது மரூஉச் சொல். கி என்ற எழுத்து மறைந்து விட்டது இட்ட ( இடு > இட்ட ) பாகம் என்பது உட்ட பாகம் ஆயிற்று.பிர்+ உட்ட > பிருட்ட! பின் இது பூசை மொழியில் இடம்பெற்று, பிரிஷ்ட, பிருஷ்ட என்று மகிழ்வாய் மெருகு இட்டுக்கொண்டு வழங்கிவருகிறது. ற + இ சேர்ந்து ரு ஆனது இதன் ஈர்ப்பு ஆகிவிட்டது.
மொழி எவ்வாறு அழகுள்ளதாக இலங்குகிறது என்றால், இன்னொரு திரிபு பாருங்கள்:
அவையின் இடு(க்)கை >சவையின் இடுக்கை > சவனி(டு)க்கை > சவனிக்கை. இது மேடைக்கு இடப்படும் திரைச்சீலையைக் குறிக்கிறது. திரை விலகியபின் ஒருவன் வந்துபாடுவான். மக்கள் மகிழ்ச்சி அடைவர். அகரம் சகரமாகும். கடின ஒலிகள் ( டு போல) தானே நீங்கிவிடும். கேட்பவன் கவனக்குறைவால் சொல்லில் மாற்றம்.
(ஞானயோகம்) மேவும் அவர் என்பது, பாகவதர் பாடுகையில் மே-பூங்கவ என்பதுபோல் ஒலிக்கிறது. படுதா போடும் வேலைக்காரனுக்கு நேரமில்லை. அதனால் அவனுக்கு சவனிக்கை என்று காதில் விழுந்து அவ்வாறே எடுத்துக்கொள்கிறான். இதில் மொழிக்கு ஒரு புதுச்சொல் கிடைத்துவிட்டதே.
பாவினால் மக்களைக் கவர்ந்தார். பா கவ(ர்ந்)தார் > பாக வதார்> பாகவதர்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
மற்றொரு வகையிலும் இச்சொல் விளக்கமுறும். இங்குக் காண்க: https://sivamaalaa.blogspot.com/2021/07/blog-post_21.html. இருபிறப்பி ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.