தலைப்பில் கண்ட மூன்று சொற்களையும் ஒப்பீடு செய்து தமிழைச் சற்று விரித்து நுகர்வோம்.
உக்கிரம் என்பதனை முன் இடுகையில் ஓரளவு அலசியுள்ளோம். உக்கிரம் ( உக்கிரப் பெருவழுதி என்ற பெயரிலும் வரும் சொல்) என்பதன் எல்லாப் பொருண்மைச் சாயல்களையும் அவ்விடுகையில் அலசிவிட வில்லை. சுருங்க இவண் குறிக்கலாம். (குறிக்கவில்லை)
உக்கிரம், இடுகை:- https://sivamaalaa.blogspot.com/2024/01/blog-post_3.html
உத்தண்டம் என்பது உக்கிரம் என்றே பொருள்படும் இதனை உது + தண்டம் எனப் பிரித்து, முன் சென்று தண்டித்தல் ( ஆய்ந்து பார்த்து முடிவு செய்யாமல் நடத்துவதுபோன்ற தோற்றம் தருதல் ) எனலாம். உத்தண்டம் செய்வோன் முன் கூட்டியே அறிந்தவனாய் இருத்தலும் கூடும்). உத்தண்டம் என்பதால் தகரம் இரட்டித்தது என்பதறியலாம்.
உத்தண்டத்தைத் தாஷ்டிதம் என்றும் கூறுவர். தாட்டுப் பூட்டென்று தாவினான் என்ற வழக்கிலிருந்து தாட்டு> தாட்டு+ இது + அம் > தாட்டிதம்> தாஷ்டிதம் எனக் காண்க. பேச்சுவழக்குத் திரிபு. தாண்டு> தாட்டு (வலித்தல்). பூட்டு(தல்), நிறுத்துதல்.
உது அண்டு அம் என்பன சேர்ந்தாலும் உத்தண்டம் என்றாகும். தகரம் இரட்டித்தது. இவ்வாறு காணின், உக்கிரத்தன்மை சற்றுக்குறைந்த நிலையைக் காட்டலாம். இருந்தாலும் எதிர்கொள்ளற் கருத்தே. அண்டுதல் - அடுத்துச் செல்லுதல். அண்டு அடு என்பன ஒருபொருளன.
உது + கடம் > உதுகடம், உதுகடமாக என்று வரும். முன் நிற்கும் எல்லைகள் கடந்து எகிறுதல். இதுவும் மிகுதியாய் என்று பொருள்படும் சொல். கடம் <கட+ அம் . ஓர் அகரம் கெட்டது, இது உத்கடம் என்று மாறிற்று. உதுகடம் என்பது வழக்கிறந்தது.
எனவே இவை பொதுவாய் மிகுதிப்பொருளன ஆகும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
மெய்ப்பு 05012023 2209
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.