மாரீசன் என்ற இராமயணப் பெயர் நினைவுக்கு வந்தது.
அதைத் தேடினேம். ( ஏம், ஓம் என இரண்டும் வரலாம். ஏம் என்பது முன்னிலையாரை உளப்படுத்தாமல் சொல்லும் திறனுடையது).( தேடினோம் என்று எழுதுவது தான் இப்போது பலரும் அறிந்து கடைப்பிடிப்பது ஆகும் ). 1,*
https://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_6492.html
இனி ஈசன் என்னும் சொல்லுக்கு இன்னொரு முடிபு கூறுவோம்:
ஈதல் - தன் நிலையின் ஒப்புமை இல்லாதவருக்கு இயன்றது உதவுதலாம்.
இறைவற்கு இணை யாருமிலர். அவரே யாவர்க்கும் ஈந்து காப்பவர்.
ஈ+து+அன் > ஈ+ சு+அன்> ஈசன்.
உகரம் கெட்டது.
தகர வருக்கம் சகர வருக்கமாகும்
எ-டு: தனி > சனி
அத்தி > அச்சி பாப்பாத்தி, செட்டிச்சி வண்ணாத்தி, ஆய்ச்சி
அத்தன் அச்சன் அத்தி அச்சி.
இடுகைகளில் காண்க
த் இடைநிலை ச் எனவாயிற்று.
தி > சி
இறைவர் ஈஷ்வர் திரிபுக்கு இது மற்றொரு முடிபு கூறியவாறு.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
குறிப்புகள்:
*நன்னூல் 140 (விகுதிகள்.)
அன் ஆன் அள் ஆள் அர் ஆர் ப மார்அ ஆ கு டு து று என் ஏன் அல் அன்
அம் ஆம் எம் ஏம் ஓம் ஒடு உம் ஊர்
க ட த ற ஐ ஆய் இ மின் இர் ஈர்
ஈயர் கயவும் என்பவும் பிறவும்
வினையின் விகுதி பெயரினும் சிலவே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.