தமிழிலக்கியத்திற் புகழப்படும் வேண்மாள் நல்லினி என்பவள் ஒரு குறுநில மன்னனின் மகள். இக் குறுநில ஆட்சியாளர்கள் "வேள்" எனற பட்டத்தினர் ஆதலின், வேளின் மகள் "வேண்மாள்" எனப்பட்டாள். வருமொழி " மா " என்ற எழுத்தின்முன் வேள் என்ற சொல்லின் ஈற்று " ள் " என்பது "ண்" என்று மாறும். இதைப்போலவே கேள்+ மாள்" என்பது கேண்மாள் என்று திரியும்.
நல்லாள் என்பதும் நல்லினி என்பதும் ஒருபொருளனவே. நல்லினி ஒரு பெண்ணின் ( இளவரசியின்) பெயராக வருகிறது. நல்+ இன் + இ = நல்லினி. பெண் குழந்தைக்கு இது நல்ல தமிழ்ப்பெயர்.
இமயவரம்பன் என்ற அரசன், வடதிசைச் சென்று போர்புரிந்து வெற்றிகள் பெற்று அப்பட்டப்பெயரைச் சூட்டிக் கொண்டான். இமயவரம்பன் என்பது ஒரு காரணப் பட்டப்பெயர். இமயமலைகளை எல்லையாகக் கொண்டு ஆண்ட பெருமைக்கு உரியோன் என்பது பொருள். தமிழ் மலையாளமாக மாறாமுன் இவன் இருந்தான். இது சங்ககாலம்.
அவன் வில் கொடி இலாஞ்சனையை இமயத்தில் ஒரு நீர்வீழ்ச்சி உள்ள இடத்தினருகில் பொறித்தான். இவ்விடம் எங்கு என்று அறியப்படவில்லை.
இலாஞ்சனை என்ற சொல்:
இல் - இலக்கு, குறி அல்லது குறியீடு,
வேலை முடிந்தபின் ஒருவன் எங்குச் செல்கிறானோ அது இல்> இல் + கு > இலக்கு. அகரம் சாரியை. அல்லது இடைநிலை. அ - அங்கு. கு- சேர்விடம் என்று பொருள் விரிக்கலாம். இல் என்பது வீடு என்றும் பொருள். ஆனால் இலாஞ்சனை என்ற சொல்லில் இந்தப் பொருளில்லை.
ஆகும் , இது இடைக்குறைந்து ஆம் என்றாகும்.
தன் - தனது. தன் - சன், இங்கு சன் என்று திரிந்தது. த என்பது ச ஆகும்.
இல் + ஆம் + சன் + ஐ = இலாஞ்சனை.
இவ்வாறு பல சொற்கள் திரிந்துள்ளன. பழைய இடுகைகளிலிருந்து மேலும் குறித்துக்கொள்க.
தம்தம் > சம் தம் > சந்தம்.
சந்தம் > சத்தம் ( வலித்தல் விகாரம் ).
மெல்லெழுத்து வல்லெழுத்தானது.
மேலும் திரிந்து அது சப்தம் ஆனது.
இவன் ஆரியரை வணக்கினான். இவர்கள் பேரிசை ஆரியர்கள். இந்த இசைவாணர்கள் திரண்டு அவனை எதிர்த்தனர். அவர்களை அவன் முறியடித்தான். ஆர் இயர் என்றால் வாத்தியம் வாசித்தவர்கள் மட்டுமல்லர், மரியாதைக் குரியவர்களாய் முன் இருந்தவர்கள். அவர்கள் எதிர்த்தனர். வெள்ளைக்காரன் புனைந்துரைத்த ஆரியர் அல்லர். Aryan Invasion Theory and Aryan Migration Theory இரண்டும் "தியரி"கள் ( தெரிவியல்கள்) தாம். அரசன் யவனர்களையும் பிடித்து ஒடுக்கினான். இந்த யவனர் அங்குப் பணி புரிந்தவர்கள்.
இப்பாடலை இங்குக் கண்டுகொள்க
: https://sivamaalaa.blogspot.com/2014/07/blog-post_99.html
அறிக மகிழ்க.
மெய்ப்பு: பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.