அறிஞர்பலர் ஆங்குள்ளார் ஆர்ந்துழைக்கும்
சிறியபாட் டாளிபலர் நிதிநிறுவாகப்
பெருந்தொழிலோ ரிடையேழை மக்கள்பல்லோர்
அறிவியலார் அவணுண்டோ என்பார்க்கெல்லாம்
அறியவைக்கும் பெருவியப்பாய் அமைந்ததொன்றே
அழகுநிலா வெற்றிகொண்ட சந்திராயன்தான்;
உரியமுறைச் செயல்திறனால் அமைத்தனுப்பி
உலகுபோற்ற நிலவாய்ந்தோர் கழகமிசுரோ.
தாமரிதின் முயன்றறிந்த நுணுக்கம்தன்னைத்
தாரணிக்குத் தருதற்கும் தயங்கும்பல்லோர்
யாமெவணும் காண்கின்ற உலகில்ஒப்பில்
சாதனையே செய்கழகம் இசுரோவென்போம்;
தாம்தமித்துத் துணையணையா அடைந்தமேன்மைத்
தனிச்செயலார் இசுரோவின் கலைமேற்கொண்டு,
தேமதுரம் உலகுக்குத் தரும்பரதம்தான்
தேசமெனத் திகழ்தக்கத் தீதில்லாதார்.
அரும்பொருள்:
ஆங்குள்ளார் - அங்கே உள்ளார்
ஆர்ந்து உழைக்கும் - நிறைவாக உழைக்கும்
நிறுவாகம் - நிர்வாகம் ( நிறுவு, வினைச்சொல்)
இசுரோ- இந்தியாவின் விண்வெளி ஆய்வுக் கழகம்
யாமெவணும் - யாம் எவணும் - யாம் எங்கும்
அறிவியலார் - விஞ்ஞானிகள்
நிலவாய்ந்தோர் - சந்திரனை ஆய்வு செய்த நிறைவு அறிவினர்
என்பது மணிமேகலை, பதிகத்திலுள்ள வரி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.