காரம் இல்லை என்று உணவு கொள்ளுங்காலை ஒருவர் சொன்னால், அதற்கு உறைப்பு அல்லது மிளகாய் போதவில்லை என்பது பொருள் என்று எடுத்துக்கொள்ளலாம். நமஸ்காரம் என்ற சொல்லுவோமானால் அதில் வரும் காரம் என்ற சொல்லுக்கு யாரும் மிளகாச்சுவை என்று கொள்வதில்லை. காரம் என்பது இங்கு தமிழால் பொருள்சொல்லும் போது, நிறைவு என்று பொருள்கொள்ளவேண்டும்.. தமிழ் என்ற சொல்லுக்கு கிருபானந்த வாரியார் சாமி நூறு அர்த்தங்கள் சொன்னதுபோல, காரம் என்பதற்குப் ஆசிரியர் பலர் பல்வேறு பொருண்மைப் பொதிவுகளை வெளிக்கொணர்ந்திருந்தாலும் இதற்கு யாம் கூறுவது இஃது பொருள்:
காரம் என்பது உண்மையில் கு+ ஆரம் என்ற இருசொற் புணர்வினிடையிற் பிரித்தகாலை வெளிப்போந்த சொல்: ( metanalysis)..
இது எப்படிப்பட்ட சொல்லமைவு என்றால், குருவிக்காரன் என்ற சொல்லில் வரும் காரன் என்பது போல், சொல்லிணைப்பில் தோன்றுவது:
குருவிக்கு அவர் . அவர் என்பதும் அர் என்பதும் ஒருபொருளன. ஆர் என்ற நெடின்முதல் வடிவமும் அதுவே.
குருவிக்கு ஆர் > குருவிக்கார் > குருவிக்கார்.
ஆர் கொஞ்சகாலம் அப்படி வழங்கிவிட்டால், அது சொல்லமைப்பில் இணைந்துவிட்டபடியால், உயர்திணைப்பலர்பால் வடிவம் என்பதை மனம் மறந்துவிடும். அதன்பால் அன் என்ற ஆண்பால் ஒருமை வடிவினைக் கொண்டுசேர்த்து,
குருவிக்காரன் என்ற சொல்லைப் படைக்கும்.
இது எண்மயக்கத்தால் ( உயர்திணை, பலர்பாலில் ஒருமை கலந்து மயங்கிய சொல்). வழுவமைதி எனக்கோடற்பாலது.
இந்த மாதிரியெல்லாம் விளக்குவதைக் குறைத்துக்கொண்டு, அது சமத்கிருதம் என்றோ, உருது கலந்தது என்றோ கூறி வாயை அடைப்பது நல்ல உத்தியாகும்.
இதை வாக்கியமாகக் கூறின், "குருவிக்கு வணிகர் அவர்/ அவன்" என்பதாம். முன்பின் அறியாதவனை, அவர் என்றாலும் அவன் என்றாலும் வேறுபாடில்லை.
இவைபோலும் சொற்களில், சுட்டுச்சொற்கள் ( அர், ஆர், அவர், அவன், இன்னும்பலவும் ) தத்தம் சிறப்புப் பொருளிழந்து இணைந்தன என்று சொல்வது இனி இலக்கணமாதல் சிறப்பாகும்.
'நலத்தின் நன்னிறைவு' என்பதே நம்ஸ்காரம் என்பது உணர்ந்துகொள்க.
நலத்தினால் ஆர்தல்( நிறைதல்) > நலக்கார்தல் ( நலத்துக்கு ஆர்தல் )
நலம்> நலமோ > நமோ. ( நமோநம) இடைக்குறைச்சொல். இடைக்குறை மீமிசை.
நலமதற்காரம் > நமற்காரம் > நமஸ்காரம்.
வடவெழுத்தை ஒருவிவிட்டால் அது முன்னிருந்த தமிழாகிவிடும் என்றார் தொல்காப்பியனார். ( வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ). சொல்லதிகாரம்.
இவைபற்றிய முற்கூற்றுகளையும் படித்து மகிழ்க.
https://sivamaalaa.blogspot.com/2021/10/blog-post_16.html நம், நமோ முதலியவை.
https://sivamaalaa.blogspot.com/2017/07/blog-post_9.html
நமோஸ்துதே ( நலம் ஓதுகிறோம் எனபது.)
நலம் ஓதுதே > நமோதுதே ( லகரம் குறந்தது) > நமோஸ்துதே.
வட ஒலியை ஒருவினால் ( எடுத்துவிட்டால்) மீண்டும் ஓத்துதே - ஓதுதே வந்துவிடும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.