Pages

சனி, 14 ஜனவரி, 2023

பாலித்தல் ( அருள்பாலித்தல் ) லிங்கம் என்பதென்ன.

 இன்று பாலித்தல் என்ற தொழிற்பெயரை அறிந்துகொள்வோம்.

தொழிற்பெயர் என்பது ஒரு இலக்கணக் குறியீடு.   இதன் பொருள்,    ஒரு வினைச்சொல்லிலிருந்து  உருக்கொண்ட பெயர்ச்சொல் என்பதுதான்.  எடுத்துக்காட்டாக,  participate ( verb)  - என்பதிற்றோன்றிய   participation (noun). என்ற சொல்லுரு   ஆகும்.   இதனை வேறுபெயரிட்டுக் குறித்த இலக்கணியரும் உண்டு.

நன்னூலின் சுவடி கிடைத்த பின்னர்,  அதை ஐரோப்பாவிற்குக் கொண்டு போய் அவர்கள்  மொழியில் பெயர்த்துக் கொண்டனர்.  அதன்பின்  அவர்களும் இலக்கணம் வரைந்து அறிந்துகொண்டனர்.  ஆகையால் நம் இலக்கணங்கள் ஒன்றுபோல்   காணப்படும். யார் இதை எடுத்துக்கொண்டு போனவர் என்னும் குறிப்புகள் உள்ளன. அதை இங்கு எழுதவில்லை. நன்னூலைக் புகழ்ந்துள்ளனர்.  அறிக.  இயற்றிய பவணந்தியாருக்கு  நன்றி. 13ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர்.  யாம் கால ஆய்வுகள் செய்வதில்லை.

இப்போது பாலித்தலுக்கு வருவோம்.

ஆங்கிலத்தில் "participate"  என்பது  பாலித்தல் என்பது போன்ற ஒரு சொல்லாகும்.   பால் - பகுதி.  பாலி -   பகுதி  தருதல் என்று சொல்லவேண்டும்.  அருளில் பகுதி தருதல்,   அல்லது பகுதி இங்கு தருதல்  பாலித்தல்.   பால்,  மற்றும் இ எனபது இங்கு தருதல், பெறுதல் என்றெல்லாம் அறிந்துகொள்க.

இறைவி  அருள் தரும்போது,  அவர்தம் கொடைத்திறம் மிளிரும் அனைத்தும் உமக்குத் தந்து விடுவதில்லை.  அது எல்லையற்றது.    உமக்குச் சோறில்லை என்று அறிந்துகொண்டு,  அதனைத் தந்து பசி போக்குகிறார். ஆகவே பகுதி அல்லது ஒரு சிறு துளியைத் தந்து காப்பாற்றுகிறார்.   ஆகவே  பாலிக்கிறார்.   அது இச்சொல்லின் கருத்து.

பாலி(த்தல்) என்ற சொல்லமைப்பில்  இ என்பது சுட்டுச்சொல், இங்கு என்பது இங்குப் பெறப்படுவது என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.

இங்கு என்பதில் இ என்பது மட்டுமின்றி, இங்கு என்ற முழுச் சுட்டுச் சொல்லும் உள்வந்த சொல்லமைப்பும் உண்டு.  அவற்றுள் ஒன்று இலிங்கம் என்பது.  இதை லிங்கம் என்பதும் காணலாம்.  

இல்  - இடம்.

இங்கு -  இருப்பது என்னும் கருத்து.

அம் -  அமைந்தது.

இடத்தில் இங்கு அமைந்திருப்பது.

காரண இடுகுறிப்பெயர்.

இதன் பொருள் என்னவென்றால்,  மேல்தோலைப் போல் உடல்முழுமைக்கும் காணப்பெறாமல், ஓரிடத்தில் மட்டும் அமைந்துள்ள ஓர் உறுப்பு.  கண்கள் இரண்டிடத்தில்.  விரல்கள் பலவிடங்களில் ஆனால் வரிசையாக. வாய் ஓரிடத்தில் என்றாலும் முகத்தில் பரவலாக உள்ளது.  மூக்கு இரு துளைகளாக.  காதும் அப்படியே. இலிங்கம் மட்டும் ஓரிடத்தில் ஒட்டி வெளியில் உள்ளது.  ஆகவே இல் இங்கு அம் > இலிங்கம் என்பது மிகவும் பொருத்தமான பெயரமைப்பு.  இது ஒரு தமிழ்மூலங்களை உடைய சொல் தான்.  இதன் இடக்கர்ப் பொருண்மையால்  இது பெரிதும் விரவிப் பயன்படாதொழிந்தது. இந்த இடக்கர்ப் பொருண்மை  இதன் சொல்லமைப்பு அறியாமையால் உண்டானது.   ஆனால் சமத்கிருத (சமஸ்கிருத ) மொழியில் இலக்கணக் குறியீட்டில் பயன்பாடு கண்டது.  சமத்கிருத மென்பது பூசைப் பயன்பாட்டு மொழியாய் இங்குத்  தோன்றி,   பின் பரவியது. இதுவும் நல் நிகழ்வே.  உலக முழுதும் சிவனின் இடம்தாம்.  சிவ - சிவனின் ,  இல் -  இடம்,  இங்கு-  இவ்வுலகமும் ஒட்டியுள்ள எல்லா இடங்களும், அம் - (ஆகிய) அமைப்பு.  இல்+ அம் :  இல்லம் = வீடு.  இல் என்பது இடம் குறிக்கும் வேற்றுமை உருபும் ஆகும்.  இவ் வுருபுகள் சொல் துண்டுகள்.  இன்றளவும் வழங்குவன, தமிழின் மாண்பு குறிப்பன ஆகும். இவை உணராமல் வேற்றுமொழி என்றது மடமை.  சமஸ்கிருதத்தில் முதல் கவி யார்?  வால்மிகி.

 தாழ்த்தப்பட்ட கவி என்றனர். அப்படியானால், அது எப்படி இந்தோ ஐரோப்பிய மொழி ஆனது?  கேள்விகள் பல உண்டு. எல்லாம் எழுத எமக்கு நேரமில்லை.

இல் இங்கு என்பது இல்லிங்கு என்று வரவேண்டும் என்பது மடவாதம். அதுதான் இடைக்குறைந்து இலிங்கு  ஆகிவிடுமே.  இலிங்கம் அல்லது லிங்கம் . கெட்டவார்த்தை ஆகாது.

இரண்டு இயல்பான அன்றாடச் சொற்களை இணைத்தால் அது அந்தரத்திலிருந்து வந்த சொந்தமில் சொல்  போல உம்மை மருட்டுவதுதான் தமிழ்மொழியின் திறம் ஆகும் அறிக.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.