அழகிய வெள்ளைப் பன்றி
அருகினில் வந்தார் தம்மை,
இளகிய நெஞ்சன் யானென்
றினிமைசேர் பார்வை காட்டி
பழகிடும் அன்பால் காணீர்.
"பசிக்கெனக் குண்ணத் தாரீர்
விளைத்திடும் எதுவும் ஏற்பேன்,
வேற்றுமை இல்லேன்" என்னும்.
"தவிக்கின்ற பசி-ப ரிந்து
தருவிரே உங்கள் கையால்,
அவித்தது பச்சை என்றும்
ஒதுக்குவ தில்லை கண்டீர்
ஒழிக்கின்ற ஊணொன் றில்லை
உயிர்வதை ஒதுக்கி விட்டேன்,
பழிக்கின்ற செயல்கள் இல்லேன்
பரிந்துதா பம்செய் வீரே!"
எல்லா உயிர்களின்மேலும் அன்பு காட்டுதல் நம் கடமை. எதையும் வதைத்தல் ஆகாது.
இந்தப் பன்றியின் வாழ்விடம் ஃபூஜி மலை, ஜப்பான்( யப்பான்) . வெளிநாட்டு வருகையாளர்கட்குக் காட்சி கொடுக்கும் ( பாவப்பட்ட) பன்றி. அங்கேயே உணவை வாங்கி அதற்கு ஊட்டலாம். வெகு தூய்மையாக வளர்க்கிறார்கள். சுற்றி வரும் பயணிகள் சுத்தக் குறைவை பன்றிக்கு ஏற்றிவிடாமல் காத்துக்கொண்டால் போதுமே! அதற்கான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
பரிந்து தாபம் செய்தல் - பரிதாபம் காட்டுதல்.
விளைத்திடும் - உண்டாக்கும் (உணவுவகை)
வேற்றுமை இல் - எல்லா உணவும் கொள்ளுதல்.
பரிந்து - இரங்கி
ஊண் - உணவு.
பரிந்து தாபம் ---- இரங்கி அன்புகாட்டுதல்.
தருவிரே - தருவீரே, முன்னிலைப் பன்மை: இர். ஈர். தருவிர் - தருவீர்.
இவ்விடுகையில் சில எழுத்துகள் மாறிவிட்டன. மீண்டும் இடுகை சரிசெய்யப்பட்டது,
மாறியது ஏனென்று தெரியவில்லை.
வரைவுத்திரை ( compose mode) மாறியிருந்தது.
படம்: திரு.குமரன் பிள்ளை.
,மெய்ப்பு மீண்டும் பார்வை பெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.