யாதவர் என்னும் சொல், முல்லை நில மக்களைக் குறிக்கும். வேறு தொழில்கள் எவற்றையும் மேவாத நிலையில், பெரும்பாலும் கால்நடைகளை இவர்கள் வளர்த்து, அவற்றின் பால் தயிர் முதலியவற்றை விற்று ஓகோவென்று வாழ்ந்தனர். இவர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த நிலையில், மாடு என்ற சொல்லுக்கே செல்வம் என்ற பொருள் ஏற்படலாயிற்று.
மேலே சொல்லப்பட்டவை தமிழ் ஆர்வலர்கள் யாவரும் நன்கறிந்தவையே.
யாம் சொல்லவிழைந்தது பின்வரும் இரட்டுறலே ஆகும்:
முடியாதவர் - இது எதுவும் செய்ய இயலாமல் ஒருவேளை உடற்குறையும் உள்ளவர் என்னும் பொருள்.
முடி+ யாதவர்: அதாவது மன்னனாய் முடிசூட்டிக்கொண்டவர்(கள்). மணிமுடி தரித்தவர்கள். ஆனால் யாதவ குலத்தினர் என்பதுதான்.
முடியுடைமை என்பது கண்ணபிரானால் மெய்ப்பிக்கப்பட்டது. மாடு என்னும் விலங்கு, என்றும் மனிதருடன் சேர்ந்திருந்து, பால் முதலியன மனிதர்க்குத் தந்து, அவர்தம் வாழ்வினை மேம்படுத்தியது. அதன் வாழ்விடமும் மனிதர்தம் வீட்டின் அருகிலே இருக்கும். மடுத்தல் - சேர்ந்திருத்தல். மடு என்ற வினைச்சொல், முதனிலை "ம" நீண்டு, மாடு என்று தொழிற்பெயராகும். அதாவது ஒரு வினைச்சொல்லிலிருந்து பிறந்த பெயர்ச்சொல். இஃது படு என்ற வினையினின்று பாடு என்ற வினைப்பெயர் அமைந்தது போலாகும். மா என்பது பெரிது என்ற பொருளையும், அம்மா என்ற சொல்லின் இறுதியையும் குறிக்கும். அதன் ஒலியும் அம்மா, மா என்றே வருகிறது. இது பல் பொருத்தம் உடையது ஆகும். மா என்பது மனிதனிலிருந்து விலகி நிற்றலை உடையதாயினும் மடு> மாடு எனச் சேர்ந்திருத்தலையும் உடையது. செல்வமும் ஆகும் என்பது உணர்க. தான் புல்லை மட்டும் உண்டாலும் மனிதனுக்குச் செல்வமனைத்தும் தந்தது மாடு. இஃது அளப்பரிய ஈகையாகும்
யாதவர் பற்றி மேலும் அறிய: https://sivamaalaa.blogspot.com/2019/11/blog-post_23.html
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.ச்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.