தரையில் எதுவும் கிடக்காமல்
தகுந்த படிநீ சுத்தம் செய்!
உரக்கப் பெரிதாய்ப் பேசிநலம்
உடலில் உனதென் றெண்ணாதே,
இரவும் பகலும் நீயறியா
ஈளை நுண்மிகள் பிற பரவும்
கரவில் வளர்நோய்க் குற்றுயிரே
குறுமி கிருமி ஆனதம்மே!
ஈளை - சளித்தொடர்புடைய ஒரு நோய்.
நுண்மி - கிருமி
பிற - ஈளை அன்றி மற்றவை
கரவில் - மறைவாக
குற்றுயிர் - மிகச்சிறிய உயிர்வகை. நுண்ணுயிர் - அதனினும் சிறியது.
கண்ணுக்குத் தெரியாத சிறுமை உள்ள உயிர்.
நுண்மையும் குறுமையும் பொருள்தளர்ச்சியாகப் பயன்படுத்தப் பட்ட சொற்கள்.
சுத்தம் -- தூய்மை. இச்சொல்லின் தோற்றம் இவ்வாறு:
https://sivamaalaa.blogspot.com/2014/04/words-of-cleanliness.html
இனி, இன்னொரு வகையிலும் இதுவே முடிபு:
உ - முன்னிருப்பது; உது : உகரத்துடன் ஒன்றன்பால் விகுதி சேர்ந்த சொல். முன்னுள்ள பொருள். இதற்கிணையான சொற்கள்: அது, இது, எது, உது.
அது > அத்து.
இதுபோல் உது > உத்து.
அத்துச் சாரியை, அது என்பதன் இரட்டிப்புதான்.
உது > உத்து > உத்தம் > சுத்தம்.
அகர வருக்க எழுத்துகள் சகர வருக்கமாய்த் திரியும்.
உத்தமர் என்பதும் இதனடியில் தோன்றியதே.
சுத்தம் என்ற சொல், மேலை இந்தோ ஐரோப்பியத்திலும் இல்லை.
கிருமி என்பது குறுமி ( குற்றுயிர், சிறியது ). கிருமி : கருமி, (கரியது) மற்றும் குறுமி . இச்சொல் இருபிறப்பிச் சொல்.
கிரு : கரு என்பது கிரு என்று திரியும்.
எடுத்துக்காட்டு: கரு> கிரு> கிருஷ்ண ( கிருஷ்ண பக்கம்)
கரு > கரி > கரிசல். (கரிசு+ அல்)
கருசணவிய பக்கம் > கிருஷ்ண......
நிலவின் ஒளியில்லாத பக்கம்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.