கறிசோறு இரசம்குழம்பு பிறட்டல் என்று
பொறிபரக்கத் தினந்தோறும் உணவு கொண்டு
மறியாடு போல்பருத்த பின்னர் (உ)ரொட்டி
அறிதின்றால் எடைகுன்றும் என்பார் தோழி!
இரசம் -- அரைசம் ( சில மருந்து இலை முதலிய அரைத்து கொதிப்பித்த நீர்.). அரைக்காமல் இப்போது வைக்கிறார்கள்.
அரைசம் > ரசம் >( இரசம்,) உலகவழக்கில் ரசம்.
மறி - செம்மறிக் கடா.
ரொட்டி - இதைப் பின் ஆய்வோம். உருஒட்டி > உரொட்டி > ரொட்டி.
ஓர் உருவாகச் செய்து, சூட்டுத்தட்டில் ஒட்டி வேவித்து எடுப்பது. பழகாத தட்டானால் அடிப்பிடிக்கும்.
அறி - அறிக.
சில்லோர் --- சிலர்.
குன்றும் - குறையும்.
சோறுகறி வேண்டாமே எடையே கூடும்
சாறுமிகும் உணவுகளால் புளிப்புத் தொல்லை;
வேறுவழி உரொட்டிஎன்று வாதம் போட,
ஈறதையே வாங்கியுணல் என்றேம் தோழி.
வாங்கிவந்து வைத்தாலும் வாயி லிட்டு
தாங்குபசி போக்கினதைக் காண வில்லை;
தேங்கினவே உரொட்டிகளே என்ன தின்றார்
ஓங்கினதும் உண்ணாமை தானோ தோழி
குறிப்புகள்:
ஈறு - முடிவு
பிறட்டல்: புரட்டிப் புரட்டி வரட்டி எடுத்து உண்ணக் கொடுப்பதால் புரட்டல் என்ற சொல்லே பிரட்டல் ( பெரட்டல்) என்று திரிந்தது என்ற கருத்தும் உள்ளது. ஆனால், குழம்பு முதலியவைக்குக் கூடுதலாகவே பிரட்டல் வைக்கப்படுகிறது.இது புரட்டல் > பிரட்டல் என்ற திரிபு என்பதைவிட,
1 பிற அட்டல் >( பிற அடு+அல் )> பிறட்டல்.
[ கூடுதலாக சமைக்கப்பட்டது.]
அட்டாலும் பால் சுவை குன்றாது என்றார் ஒளவை. மூதுரை.
2 பிற அடு அல் > பிறட்டல்
[பிற குழம்புக்கு அடுத்ததாக வைக்கப்படுவது அல்லது
ஆக்கிக் கொடுக்கப்படும் உணவு.]
அடுத்து அணைவாக வைக்கப்பட்டது என்ற பொருள் "அட்ட அணை" > அட்டவணை என்பதிலும் உளது.
மேங்கறி என்பது ஏற்புடைத்தே. இட்ட உணவுக்கு மேலாக வைக்கப்படுவது.
அடுத்தடுத்து ஒட்டிய கடுதாசியால் ஆனது அட்டை. அடு+ ஐ : அட்டை. அடு ( அடுத்தல் என்பதும் இரட்டித்தது).
சொல்லாக்கத்தில் இரட்டிப்பதும் அஃதின்மையும் ஒலிநயம் கருதி அமையும்.
அட்ட : இது எட்டு என்பது இங்கு பொருந்தவில்லை; எல்லா அட்டவணைகளிலும் எட்டுப் பகுதிகள் இல்லை. எட்டு என்பது பொருந்துமிடங்கள் வேறு காண்க.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.
கருத்துகளைப் பின்னூட்டம் செய்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.